!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 1 ஜூலை, 2015

தனியார் மருத்துவ கல்லூரியில் 'அட்மிஷன்':ரூ.35 லட்சம் மோசடி: ஒருவருக்கு ரிமாண்ட்
 தனியார் மருத்துவக்கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., 'சீட்' வாங்கி தருவதாக கூறி கட்டுமான தொழில் செய்பவரிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்ததாக, மதுரை பரவையை சேர்ந்த சர்தார்,62, ரிமாண்ட் செய்யப்பட்டார். மனைவி, மகன் உட்பட நால்வரை தேடுகின்றனர். 

மதுரை நரிமேடு அவ்வையார் தெருவை சேர்ந்தவர் திருப்பதி,46. கட்டுமான தொழிலுக்கு மூலப்பொருட்கள் சப்ளை செய்கிறார். மகன் சிபிச்சக்ரவர்த்தி. 2014ல் பிளஸ் 2 படித்தார். பரவையை சேர்ந்தவர் சர்தார். மனைவி மல்லிகா பேகம், மகன் ரபீக் ஆகியோர் திருப்பதி குடும்பத்தினருடன் நெருங்கி பழகினர். சிபிச்சக்ரவர்த்திக்கு புதுச்சேரி அனந்தராமன் மூலம் புதுச்சேரி தனியார் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., சீட் வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.35 லட்சம் செலவாகும் என சர்தார் கூறியுள்ளார்.இவரது பேச்சை நம்பிய திருப்பதி பல கட்டங்களில் சர்தார், மனைவி, மகன், அனந்தராமன் மற்றும் விஜயமோகன் ஆகியோரிடம் ரூ.35 லட்சம் கொடுத்தார். 'சீட்' வாங்கித்தரவில்லை. மேலும் ரூ.5 லட்சம் கொடுத்தால் அடுத்த கல்வியாண்டில் 'சீட்' வாங்கி தருவதாக கூறினர். ரூ.5 லட்சம் தராவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவிடம், திருப்பதி புகார் கூறினார்.
கமிஷனர் உத்தரவுப்படி சர்தார், மல்லிகாபேகம், ரபீக், அனந்தராமன், விஜயமோகன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சர்தாரை கைது செய்து முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் உத்தரவுப் படி, சர்தார் 15 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டார். ஏனையோரை தேடி வருகின்றனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png