!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 2 ஜூலை, 2015

அரசாணைப்படி ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்


பட்டியல் இனத்தில் குறிப்பிட்ட உள்பிரிவிலேயே ஜாதி சான்றிதழ் வழங்கி வருவதால், அரசாணைப்படி சான்றிதழ் வழங்க வருவாய்த் துறைக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

 இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: 
 பட்டியல் இனத்தை சேர்ந்த குடும்பன், பண்ணாடி, கல்லாடி, கடையன், தேவேந்திர குலத்தான், பள்ளன், வத்திரியன் ஆகிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வசித்து வருகின்றனர்.
 இந்த 7 சமுதாயத்தினரையும் சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என அழைக்க தமிழக ஆதி திராவிட, பழங்குடியினர் நலத்துறை கடந்த 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அரசாணை பிறப்பித்தது.
 ஆனால் பட்டியல் இனத்தில் குறிப்பிட்ட உள்பிரிவிலேயே ஜாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. எனவே, அரசாணைப்படி சான்றிதழ் வழங்க வருவாய்த் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனு புதன்கிழமை விசாரித்த நீதிபதி மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png