!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 29 ஜூலை, 2015

ஏமாற்றம் ! : இலவச சைக்கிள் கிடைக்காததால் மாணவர்கள்... : கடந்த ஆண்டில் விடுபட்டவர்களுக்கு கிடைப்பதில் சிக்கல்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் அரசின் இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு பெரியகுளம் தாலுகா வடுகபட்டி, வாடிப்பட்டி உள்ளிட்ட நான்கு பள்ளிகளில் பிளஸ் 1 படித்த மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

நான்கு பள்ளிகளுக்கு சைக்கிள் முழுமையாக வழங்காமல் 50 சதவீத அளவிற்கே வழங்கப்பட்டது. ஒவ்வொரு பள்ளியிலும் 100 முதல் 200 வரை மொத்தம் 800 மாணவர்களுக்கு சைக்கிள் இதுவரை வழங்கப்படவில்லை. தேனி, விருதுநகர் மாவட்டத்திற்கு சைக்கிள் வினியோகம் செய்ய டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் ஒரே நபர் ஆவார். கடந்த ஆண்டு தேனி மாவட்டத்திற்கு வழங்க வேண்டிய 800 சைக்கிள்கள் லாரியில் ஏற்றி தவறுதலாக விருதுநகர் மாவட்டத்தில் ஒரு பள்ளியில் இறக்கிவிட்டனர்.
இதனால் தேனி மாவட்டம் வடுகபட்டி, வாடிப்பட்டி உள்ளிட்ட நான்கு பள்ளிகளுக்கு சைக்கிள் பற்றாக்குறையாகி விட்டது. அப்போது சைக்கிள் பெறாதவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என கூறி சமாளித்துவிட்டனர். தற்போது பல மாதங்கள் முடிந்தும் சைக்கிள் கிடைக்கவில்லை. ஏனென்றால் விருதுநகர் மாவட்ட பள்ளியில் திறந்த வெளியில் இறக்கி வைத்த சைக்கிள் மழை, வெயிலில் நனைத்து துருப்பிடித்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அதனை எடுத்து வர லாரி வாடகையாக பல ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது. அப்படியே சைக்கிளை எடுத்து வந்தாலும் பழுதடைந்த சைக்கிள்களை பள்ளி நிர்வாகம் வாங்க மறுக்கும். இதுபோன்ற காரணங்களால் 800 பேர் சைக்கிள் பெற முடியாமல் தவிக்கின்றனர்.
இந்த ஆண்டு பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு துவக்கத்திலேயே இலவச சைக்கிள் வழங்கும் பணி துவக்கிவிட்டது. மாவட்டத்தில் 14,817 மாணவ, மாணவியர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு பிளஸ்1 படிக்கும் மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் கடந்த ஆண்டு படித்த மாணவர்கள் சைக்கிள் கிடைக்காததால் ஏமாற்றத்தில் உள்ளனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வாசு கூறுகையில், ""கடந்த ஆண்டு சைக்கிள் பெறாத மாணவர்களுக்கு இந்த ஆண்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png