நீதிபதிக்கு கடிதம் எழுதிய தலைமையாசிரியர்: வழக்கு விசாரணை மாற்றம்
பணி நீக்கம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிக்கே எதிர்மனுதாரரான தலைமைஆசிரியர் கடிதம் எழுதியதால் வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்றப்பட்டது.திருநெல்வேலி அருகே வீரபாண்டியன் இந்து துவக்கப் பள்ளி செயலாளர் அதிசய மேரி தாக்கல் செய்த மனு:
வீரபாண்டியனில் அரசு உதவி பெறும் பள்ளி நடத்துகிறேன். தலைமையாசிரியராக சந்திரசேகரன் பணிபுரிந்தார். அவர் நிர்வாகத்திற்கு ஒத்துழைக்கவில்லை. பள்ளி நலனுக்கு எதிராக செயல்பட்டார். இடைநிலை ஆசிரியை கஸ்துாரியை துாண்டி விட்டார். அவர்கள் மீது கல்வித்துறை துறை நடவடிக்கை எடுத்தது. சந்திரசேகரன், கஸ்துாரியை மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர்
2010 ல் பணி நீக்கம் செய்தார்.
இதை எதிர்த்து சந்திரசேகரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை துவக்கக் கல்வி இணை இயக்குனர் 2010 செப்.,13 ல் தள்ளுபடி செய்தார். அதை எதிர்த்து சந்திரசேகரன் 2011 ல் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். வழக்கு நிலுவையில் இருந்த போது ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை
மறு பரிசீலனை செய்ய இணை இயக்குனரிடம் கோரினார். வழக்கை 2015 பிப்.,23 ல் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.ஏற்கனவே பணிநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து 2015 ஏப்.,10 ல் இணை இயக்குனர் உத்தரவிட்டார். அவ்வாறு செய்ய இணை இயக்குனருக்கு அதிகாரம் இல்லை. அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.நீதிபதி எஸ்.வைத்தியநாதன் ஏற்கனவே இவ்வழக்கில் இந்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. எதிர்மனுதாரரான சந்திரசேகரன் எனக்கு 60 பக்கங்களில் கடிதம் எழுதியுள்ளார். மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் தங்களது கோரிக்கைகளை உயர்நீதிமன்ற பதிவுத்துறை மூலம் தெரிவிக்கலாம். நேரடியாக சம்பந்தப்பட்ட நீதிபதிக்கே கடிதம் எழுதுவது ஏற்புடையதல்ல. இம்மாதிரி கடிதம் எழுதுவது தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட வழக்கை விசாரிப்பதிலிருந்து நீதிபதிகள் விலகிக் கொள்வர் அல்லது அபராதம் விதித்து வழக்கை தொடர்ந்து நடத்துவர். அனைத்து நீதிபதிகளும் விசாரிப்பதிலிருந்து விலகிக்கொண்டால் வழக்கிற்கு தீர்வு கிடைக்காது.இவ்வழக்கை விசாரிக்க விரும்பவில்லை. வேறு நீதி பதி விசாரணைக்கு மாற்றப்படுகிறது என்றார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.