!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 9 ஜூலை, 2015

ஆசிரியருக்கு வட்டியுடன் ஓய்வூதிய பலன்
புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்பட்ட தொகை, உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு வட்டியுடன் வழங்கப்பட்டது.
தமிழகத்தில், 2003- ஏப்ரல் 1ல் இருந்து, புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்திற்காக பணி நியமனம் பெற்றவரிடம் கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால், ஓய்வுபெற்ற யாருக்கும் இதுவரை ஓய்வு நிதி வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக ஆசிரியர்கள் தொடுத்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
மதுரை, மேலுார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியை காமாட்சி, தன்னிடம் பிடித்தம் செய்த ஓய்வு நிதியை திரும்ப வழங்குமாறு, தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தார். சரியான பதில் இல்லாததால், மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். பிடித்த பணத்தை, 3 மாதங்களுக்குள் வழங்க, கடந்த ஆண்டு ஜூலை 18ல், மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின்னும் தொகையை வழங்காததால், காமாட்சி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தார்.
இதையடுத்து, கடந்த ஏப்ரல் 22ம் தேதி அன்று வெளியான தமிழக அரசின் ஆணை 124ன்படி, 1.72 லட்சம் ரூபாய் பிடித்தம் செய்த நிதியுடன், அரசின் பங்களிப்பு மற்றும் வட்டியும் சேர்த்து, 3 லட்சத்து 77 ஆயிரத்து 406 கருவூலம் மூலம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி திண்டுக்கல் மாவட்ட நிர்வாகி பிரடெரிக் ஏஞ்சல்ஸ் கூறியதாவது:
ஓய்வூதியம் தருவதாக தான் பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால், பிடித்தம் செய்த பணத்தை பெற முடியாமல் பலர் அவதிப்படுகின்றனர். எனவே, 2003 ஏப்ரல் 1ம் தேதிக்கு முன், பண பலன் மற்றும் பணிக்கொடை உள்ளிட்ட திட்டத்தில், என்ன நடைமுறை இருந்ததோ, அதையே மீண்டும் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png