!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 24 ஜூலை, 2015

'கார்கள், இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்களில், வேக கட்டுப்பாடு கருவி பொருத்துவதற்கு, மத்திய, மாநில அரசுகள் ஏன் பரிசீலிக்கக் கூடாது' 

இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், 'ஹெல்மெட்' அணிய வேண்டும் என, அதிரடி உத்தரவு பிறப்பித்த, சென்னை உயர்நீதிமன்றம், தற்போது, வாகன வேகம் விஷயத்தில் தன் கவனத்தை திருப்பி உள்ளது. 'கார்கள், இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்களில், வேக கட்டுப்பாடு கருவி பொருத்துவதற்கு, மத்திய, மாநில அரசுகள் ஏன் பரிசீலிக்கக் கூடாது' என, கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில், இரு பஸ்கள் மோதியதில், இருவர் உயிரிழந்தனர்; 29 பேர் காயமடைந்தனர். விபத்துக்கு, வாகனங்களின் அதிவேகமே காரணம் என கூறப்பட்டது.உயிரிழந்தோர் குடும்பத்துக்கு, இழப்பீடு வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், போக்குவரத்து கழகம் சார்பில், மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். அப்போது, 'அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குவதன் மூலம், விபத்துகள் ஏற்படுகின்றன; 
வாகனங்களில் வேக கட்டுப்பாடு கருவிகள் பொருத்த மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் என்ன?' என, கேள்வி எழுப்பி
யிருந்தார்.

இடைக்கால உத்தரவு:

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்ஜி.ராஜகோபாலன், தமிழக அரசு சார்பில்,சிறப்பு பிளீடர் வேணுகோபால் ஆஜராகினர்.
நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த இடைக்கால உத்தரவு: மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், எந்தெந்த வாகனங்களில், வேக கட்டுப்பாடு கருவிகள் பொருத்தலாம் என்பதை வகைப்படுத்த, மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள, தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையைப் பார்க்கும்போது, மரணத்தை ஏற்படுத்தும் சாலை விபத்துகளில், இரு சக்கர வாகனங்கள் தான், அதிக எண்ணிக்கையில் உள்ளன.
உயிரிழப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம், அதிவேகமாக வாகனங்களை இயக்குவது தான். 
அவசியம் உள்ளதுபோக்குவரத்து அல்லாத வாகனங்கள் மூலம் ஏற்படும் சாலை விபத்துகளில், 51 சதவீதத்திற்கும் மேல், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.எனவே, அதிவேக,
திறனுடைய இன்ஜின்கள் பொருத்தப்பட்ட கார்கள்ஜீப்கள், இரு சக்கர வாகனங்களில், வேக கட்டுப்பாடு கருவிகள் பொருத்த வேண்டிய அவசியம் உள்ளது.

கார்கள், இரு சக்கர, மூன்று சக்கர வாகனங் களுக்கு, அதிகபட்ச வேகம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதா என்ற விவரங்களை, மத்திய, மாநில அரசுகள் அளிக்க வேண்டும்.இந்த வாகனங்களில் வேக கட்டுப்பாடு கருவி பொருத்துவது குறித்து, மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்.
நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும். விசாரணை, 28ம் தேதிக்கு, தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

விபத்துகளில் வாகனங்களின் பங்கு
இரு சக்கர வாகனங்கள் 26.4 (சதவீதங்களில்)
லாரிகள், டிரக்குகள் 20.1
கார்கள் 12.1
பஸ்கள் 8.8
ஜீப்கள் 4.5
ஆட்டோக்கள், 
மூன்று 
சக்கரவாகனங்கள் 5.8
* பெரும்பாலான சாலை விபத்துகள், அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதன் மூலம் ஏற்படுகின்றன. இதன் சதவீதம், 36.80. 
இறப்பு எண்ணிக்கை 48,654 பேர்
காயமடைந்தோர் 1.81 லட்சம் பேர்

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png