பி.இ. கலந்தாய்வு: 76 ஆயிரம் பேர் சேர்க்கை
பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வில் இதுவரை 76 ஆயிரம் பேர் சேர்க்கை பெற்றுள்ளனர்.
கலந்தாய்வு தொடங்கி 22 நாள்கள் முடிந்த நிலையில் 30 ஆயிரம் பேர் கலந்தாய்வில் பங்கேற்பதைத் தவிர்த்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி தொடங்கியது. கலந்தாய்வில் பங்கேற்க புதன்கிழமை வரை மொத்தம் 1,07,005 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் 76,351 பேர் இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். 30,259 பேர் பங்கேற்கவில்லை. 395 பேர் கலந்தாய்வில் பங்கேற்றபோதும், இடங்களைத் தேர்வு செய்வதைத் தவிர்த்துவிட்டனர்.
இப்போது 1 லட்சத்து 16 ஆயிரத்து 742 பொறியியல் இடங்கள் காலியாக உள்ளன.
இடங்களைத் தேர்வு செய்தவர்களில் 38,393 மாணவ, மாணவிகள் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.