மாநில அளவில் இடம் பிடித்த மாணவர்களுக்கு ரூ.1 கோடியே 68 லட்சம் பரிசு; சென்னையில் வழங்கப்பட்டது
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநில அளவில் 1-வது, 2-வது மற்றும் 3-வது இடத்தை பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், பிளஸ்-2 தேர்வில் 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்த மாணவ-மாணவிகளுக்கும் சேர்த்து மொத்தம் 988 பேருக்கு சான்றிதழ்களும், ரூ.1 கோடியே 68 லட்சத்து 5 ஆயிரம் பரிசும் நேற்று வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழா
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியிடப்பட்டன.
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த 21 மாணவ-மாணவிகளுக்கு ரூ.10 லட்சத்து 50 ஆயிரத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா பரிசாக வழங்கி பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினார்.
பிளஸ்-2 தேர்வில் 2-வது மற்றும் 3-வது இடத்தை பெற்றவர்களுக்கும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
5 அமைச்சர்கள்
விழாவில் வனத்துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.சுப்பிரமணியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.அப்துல் ரகீம் ஆகியோர் கலந்துகொண்டு பரிசும், பாராட்டு சான்றும் வழங்கினார்கள்.
மொத்தம் 988 பேர் ரூ.1 கோடியே 68 லட்சத்து 5 ஆயிரத்திற்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றுகள் பெற்றனர்.
த.சபீதா
விழாவில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் கே.அருள்மொழி, வனத்துறை முதன்மை செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதன்மை செயலாளர் முகமது நசிமுதின், சமூக நலத்துறை முதன்மை செயலாளர் பி.சிவசங்கரன், ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் பி.அண்ணாமலை, அனைவருக்கும் கல்வி திட்ட மாநில இயக்குனர் பூஜா குல்கர்னி, பள்ளி கல்வித்துறை இயக்குனர்கள் க.அறிவொளி, ரெ.இளங்கோவன், எஸ்.கண்ணப்பன், வி.சி.ராமேஸ்வர முருகன், இரா.பிச்சை, இணை இயக்குனர்கள் கார்மேகம், பழனிச்சாமி, கருப்பசாமி, பொன்னையா, பாஸ்கர சேதுபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.