ஆசிரியைகள் கட்டிப்புரண்டு சண்டை: மாணவர்கள் கண்முன் அலங்கோலம்
மாணவர்கள் முன்னிலையில், இரு ஆசிரியைகள் கட்டிப்புரண்டு, குடுமிப்பிடி சண்டையிட்ட சம்பவம், கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.கோவை மாவட்டம், மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ஆங்கில பட்டதாரி ஆசிரியையான
முனியம்மாவுக்கும், இடைநிலை ஆசிரியையான பிரேமாவுக்கும், பல மாதங்களாக பிரச்னை இருந்து வந்துள்ளது.கடந்த, மார்ச், 27ம் தேதி, மாணவர்கள் முன்னிலையில், இருவரும் சண்டை போட்டு, தகாத வார்த்தைகளால் பேசி, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தலைமையாசிரியை பத்ரம்மாள், தன் அறைக்கு, இருவரையும் அழைத்து விசாரிக்கும்போதே, ஒருவருக்கொருவர் ஆபாச வார்த்தைகள் கூறி, தரையில் உருண்டு குடுமிப்பிடி சண்டையிட்டுள்ளனர்.இந்த சண்டை தொடர்ந்ததால், இருவரும், வெவ்வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டனர். சமீபத்தில், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், இருவரையும், மீண்டும் பழைய பள்ளியில் பணியாற்ற உத்தரவிட்டார்.இந்நிலையில், சில நாட்களுக்கு முன், மீண்டும், மாணவர்கள் முன்னிலையில், இரு ஆசிரியைகளும் ஆவேசமாக சண்டை போட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
''விரைவில், இரு ஆசிரியைகள் மீதும் கடும் நடவடிக்கைஎடுக்கப்படும்.- காந்திமதி,
கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்
''மாணவர்கள் முன்னிலையில், ஆசிரியைகள் சண்டையிடுவது தவறு. உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இருவரிடமும் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.- பத்ரம்மாள், தலைமை ஆசிரியை
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.