!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 6 ஜூலை, 2015

பொதுப் பிரிவு பி.இ. கலந்தாய்வு: 5 நாள்களில் 4,452 பேர் பங்கேற்கவில்லை

பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கி 5 நாள்கள் முடிந்துள்ள நிலையில், 4,452 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. மொத்தம் 17,968 பேர் இடங்களைத் தேர்வு செய்து சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர்.


 அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 1 ஆம் தேதி தொடங்கியது. கலந்தாய்வில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை வரை மொத்தம் 22,516 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 17,968 பேர் இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். 4,452 பேர் பங்கேற்கவில்லை. 96 பேர் கலந்தாய்வில் பங்கேற்றபோதும், இடங்களைத் தேர்வு செய்வதைத் தவிர்த்துவிட்டனர். இதுவரை இசிஇ பிரிவே அதிக மாணவர்களின் விருப்பப் பிரிவாக உள்ளது. 3,818 பேர் இந்தப் பிரிவைத் தேர்வு செய்திருக்கின்றனர். அடுத்தபடியாக 3,288 பேர் மெக்கானிக்கல் பிரிவையும், 2,458 பேர் சிஎஸ்இ பிரிவையும், 1,702 மாணவ, மாணவிகள் சிவில் பிரிவையும், ஐடி பிரிவை 1,047 பேரும் தேர்வு செய்துள்ளனர்.
 இடங்களைப் பொருத்தவரை அண்ணா பல்கலைக்கழக துறைகள், உறுப்புக் கல்லூரிகளில் 4,990 இடங்கள், அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 1,701 இடங்கள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 1,68,482 இடங்கள் என மொத்தம் 1 லட்சத்து 75 ஆயிரத்து 173 இடங்கள் காலியாக உள்ளன.
 

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png