!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 6 ஜூலை, 2015

வகுப்பில் ஆபாச படம் பார்த்ததாக 7 ம் வகுப்பு மாணவிகள் 'சஸ்பெண்ட்'
கோவையிலுள்ள சி.பி.எஸ்.இ., பள்ளியில், வகுப்பில் ஆபாச படம் பார்த்ததாக ஏழு மாணவிகள், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இப்பள்ளியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். கடந்த, 3ம் தேதி, ஏழாம் வகுப்பில், ஆசிரியை பாடம் நடத்திக்கொண்டிருந்தார். கடைசி வரிசை இருக்கைகளில் அமர்ந்திருந்த மாணவிகளிடையே சலசலப்பு ஏற்பட்டது; இதை, ஆசிரியை கண்டித்துள்ளார். மீண்டும் பேச்சு தொடர்ந்ததால், அந்த மாணவிகளின் கையில் இருந்த, விலை உயர்ந்த மொபைல் போனை கைப்பற்றி, அதிலுள்ள பதிவுகளை பார்வையிட்டார். ஆபாச பட காட்சிகள், தகவல்கள் இருந்தன.அதிர்ச்சியடைந்த அவர், தலைமையாசிரியிடம் தெரிவித்தார். மாணவிகளின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு, விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. ஒழுங்கீன செயல்களுக்காக ஏழு மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இச்சம்பவம், பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறுகையில்,'மாணவிகளின் மொபைல் போனில், சில ஒழுங்கீன பதிவுகள் இருந்ததால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வகுப்புகளில் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்படும்' என்றார்.

ஆசிரியர்கள் கூறியதாவது:படிக்கும் பிள்ளைகளுக்கு எது தேவையோ, அதை மட்டுமே பெற்றோர் வாங்கித்தர வேண்டும். தங்களுக்கு வசதி, வாய்ப்பு இருக்கிறது என்பதற்காக, விலை உயர்ந்த மொபைல் போன்களையும் வாங்கித்தருகின்றனர்; இது தவறல்ல.ஆனால், அந்த போன்களை ஒழுங்கு முறையாக பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வு, தங்கள் பிள்ளைக்கு இருக்கிறதா, என்பதை ஆராய வேண்டும். அவர்களின் நட்பு வட்டாரத்தையும் கண்காணிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், அந்த மொபைல் போன்களே, பிள்ளைகளின் எதிர்காலத்தை அழித்தொழிக்கும் எமனாக மாறிவிடும் அபாயமிருக்கிறது.இவ்வாறு, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png