'ஹெல்மெட் உத்தரவு அனைவருக்கும் பொருந்தும்'
ஹெல்மெட் அணியும் விதிமுறை, அனைவருக்கும் பொதுவானது; நீதிபதிகளோ, வழக்கறிஞர்களோ, பத்திரிகையாளர்களோ, சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல,'' என, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தெரிவித்தார்.
திருநெல்வேலியில், மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில், மறைந்த வழக்கறிஞர்கள் வெங்கடகிருஷ்ணன், சங்கரநாராயணன் படத்திறப்பு விழா, நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற தலைமை நீதிபதி கவுல், நிருபர்களிடம் கூறுகையில், ''நெல்லை மாவட்டத்தில், 47 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வழக்கு
களை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். பின், படிப்படியாக, நிலுவையில் உள்ள வழக்குகள் முடிக்கப்படும்,'' என்றார்.
'ஹெல்மெட்' அணிய, உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், சிலர், அதற்கு எதிராக பேரணி நடத்தியது குறித்து, நிருபர்கள் கேட்டதற்கு, கவுல் கூறியதாவது:சட்டம் அனைவருக்கும் பொதுவானது; பிரஸ், வழக்கறிஞர் என, 'ஸ்டிக்கர்'கள் அணிந்து கொள்வது, அவரவர் வளாகங்களில் புரிந்து கொள்வதற்கு தான். பத்திரிகையாளரோ, வழக்கறிஞர்களோ, நீதிபதிகளோ, அனைவருக்கும் சட்டம் ஒன்று தான்; யாரும், சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.ஹெல்மெட் அணிவதில் விதிவிலக்கு தேவையென விரும்புவோர், நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.