!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 10 ஜூலை, 2015

போதையில் ரகளை செய்த மாணவிக்கு மது கிடைத்தது எப்படி?
மது போதையில் ரகளை செய்த கோவை மாணவிக்கு, அவருடன் பள்ளியில் படிக்கும் சக மாணவன் தான், 'டாஸ்மாக்'கில் மது வாங்கியதாக, தகவல் வெளியாகி உள்ளது.
பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சாதனை, இந்திய அளவில் யு.பி.எஸ்.சி., தேர்வில் தேர்ச்சி என, மாணவ, மாணவியர் வாகை சூடும் கோவை, தடம் மாறும் களமாக மாறி வருகிறதோ என்ற அச்சம், பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.

காதல் சோகம்
கோவை தனியார் பள்ளியில் படிக்கும், 16 வயது பிளஸ் 2 மாணவி, காதல் தோல்வியால், மது அருந்தி ரகளையில் ஈடுபட்ட சம்பவத்தில், மாணவியுடன் பள்ளியில் படிக்கும் மாணவர் தான், டாஸ்மாக்கில் மது வாங்கியதாக தெரிகிறது.மதுவை, மாணவியின் குளிர்பான பாட்டிலில் ஊற்றி, பீளமேட்டிலுள்ள தனியார் வணிக வளாகத்துக்கு, இரண்டு ஆண் மற்றும் மூன்று பெண் நண்பர்களுடன் சென்றுள்ளார். 
அங்கு, குளிர்பானம் அருந்துவது போல், அனைவரும் சேர்ந்து மது அருந்தி, 'காதல் சோகத்தை' கொண்டாடி உள்ளனர். பின், அங்கிருந்து ஆண் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு, சிட்ரா, சரவணம்பட்டி, துடியலுார் வரை, இருசக்கர வாகனத்தில் மது அருந்தியவாறே, மாணவி சென்று உள்ளார்.
மாலை 4:00 மணியிலிருந்து, இரவு 7:00 மணி வரை, மது அருந்திய மாணவிக்கு, எக்குத்தப்பாக போதை ஏறியது. இதனால், வீட்டுக்கு செல்ல மறுத்து, துடியலுார், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, நுாலகம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து, ரோட்டில் கீழே குதித்துள்ளார். அங்கு கூடிய பொதுமக்களை, சகட்டு மேனிக்கு மாணவி திட்டியுள்ளார்.இச்சம்பவத்தில் விசாரணை நடத்திய போலீசார், மாணவியுடன் மது அருந்திய மற்ற மூன்று மாணவியர் மற்றும் ஆண் நண்பர்கள் குறித்து விசாரித்து விட்டு அனுப்பி வைத்துள்ளனர்.
யார் குற்றவாளி?
சட்டப்படி, 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது. ஆகவே, பள்ளி மாணவனுக்கு மது விற்பனை செய்த, 'டாஸ்மாக்'காரர்கள் தான், முக்கிய குற்றத்தை செய்துள்ளனர்.
மாணவியர் மது அருந்தியதாக கூறப்படும், பீளமேடு தனியார் வணிக வளாக நிர்வாக மேலாளர், ராமச்சந்திரனிடம் கேட்ட போது, ''இங்கு அனைவரும், தீவிர சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், குளிர்பானத்தில் மது கலந்து உள்ளே எடுத்து வருவதை, கண்காணிப்பது கடினம்; அதுவும் பள்ளி மாணவி என்பதால், உன்னிப்பாக கண்காணிக்காமல் இருந்திருக்கலாம்; மாணவி மது அருந்தி, இங்கு ரகளை எதுவும் செய்யவில்லை,'' என்றார்.
போலீசார் சொல்வதென்ன?
மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனிடம் கேட்ட போது, ''இச்சம்பவத்தை அடுத்து, மாநகர் முழுவதும், 'பார்' மற்றும் பிற இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, மது விற்பனை செய்வது தெரிந்தால், போலீசாருக்கு பொதுமக்கள் தகவலளிக்க வேண்டும்,'' என்றார்.


நெறிமுறைகளை மீறும் 'தாபா'க்கள்
கோவை மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், 'தாபா'க்கள் செயல்படுகின்றன. இங்கு எவ்வித நெறிமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை. பகல் நேரங்களில், மது விற்பனை ஜோராக நடக்கிறது. சில தாபாக்களில், மது அருந்த அனுமதிக்கப்படுகிறது.
மாணவர்கள் என்றும் பாராமல், அதிக பணத்தை பெற்று கொண்டு இங்கு, 'சரக்கு' சப்ளை செய்யப்படுகிறது. ஆண் நண்பர்களுடன் செல்லும் பள்ளி, கல்லுாரி மாணவியரும், மது அருந்துவதாக கூறப்படுகிறது. பெற்றோர் கண்காணிக்க தவறினால், மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறி தான்.மாவட்ட எஸ்.பி., சுதாகரிடம் கேட்ட போது, ''பார் மற்றும் 'தாபா'க்களில், தீவிர சோதனை நடத்தப்படும். நெறிமுறைகளை மீறி செயல்படும், 'பார்'கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png