!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 10 ஜூலை, 2015

கதறி அழுதார் தந்தை; தவறை மறுத்தார் தாய்: மது அருந்திய மாணவியால் சிக்கல்

கோவையில் தனியார் பள்ளி மாணவி மது அருந்தி, பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்டது தொடர்பாக, அந்த மாணவி மற்றும் பெற்றோரிடம், கல்வி அதிகாரிகள் விசாரணையை துவங்கினர். மாணவியை மது அருந்த துாண்டியோரை, கண்டுபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் பிச்சை பிறப்பித்த உத்தரவுப்படி, பள்ளிக் கல்வித்துறை மற்றும் மெட்ரிக் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று, மாணவியின் பெயர் மற்றும் பெற்றோர் முகவரியை அறிந்து அவர்களை சந்தித்துப் பேசினர்.அப்போது, மாணவியின் தாய், 'என் மகள் எந்த தவறும் செய்யவில்லை; நீங்கள் முகவரி மாறி வந்துள்ளீர்கள்' எனக்கூறி, அதிகாரிகளை சந்திக்க மறுத்தார்.அதிகாரிகள், கொஞ்சம் கொஞ்சமாக பெற்றோரிடம் எடுத்துக் கூறி, மாணவியை சந்தித்து பேசினர். மாணவி யின் தந்தை, மத்திய அரசு அதிகாரி. அவர், அதிகாரிகள் முன்னிலையில், மகளின் போக்கை நினைத்து கதறி அழுதுள்ளார்.
தான் பணி நிமித்தமாக வெளியூரில் இருப்பதால், மனைவி தான் மகளை கவனித்து வந்ததாகவும், தன்னால் மகளின் நடவடிக்கையை தெரிந்து கொள்ள முடியவில்லை என்றும் கூறி தன் முகவரி மற்றும் மகள் விவரங்களை வெளிப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, மாணவிக்கும், பெற்றோருக்கும், அதிகாரிகள் ஆறுதல் கூறினர். கவுன்சிலிங்குக்கு ஏற்பாடு செய்வதாகவும், அதில் கண்டிப்பாக, மூன்று பேரும் பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.
* மாணவியை இந்த நிலைக்கு துாண்டியது யார்?
* அவரை மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமை
யாக்கியது ஆண் நண்பரா அல்லது தோழியரா?
* அவர்கள் பள்ளி மாணவ, மாணவியரா அல்லது வெளியில் உள்ளவர்களா என விசாரணை நடத்த, தனியார் பள்ளிக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட மெட்ரிக் ஆய்வாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு தோழியரிடமும் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

முகவரியை கண்டுபிடிக்க திணறல்

போதையில் மாணவி பிடிபட்ட போது, அவரை துடியலுார் போலீசார் மீட்டு, அடையாள அட்டையில் உள்ள போன் எண்ணுக்கு தகவல் கூறி, பெற்றோரை வரவழைத்து, மாணவியை அனுப்பி வைத்தனர். ஆனால், மாணவியின் பெயர், பெற்றோர் முகவரி, எந்த பள்ளி, மொபைல்போன் எண் போன்ற விவரங்களை வாங்கி வைக்கவில்லை.
காவல் நிலைய, தரை வழி போன் மூலம் பெற்றோரிடம் பேசியதால், மொபைல்போன் எண்ணும் தெரியவில்லை. இதனால், மாணவியின் பள்ளி மற்றும் முகவரியை அறிய, பள்ளிக் கல்வி அதிகாரிகள் திணறினர்.
பத்திரிகைகளில் வெளியான புகைப்படத்தில் இடம் பெற்றிருந்த, மாணவியின் சீருடை அடிப்படையில், மூன்று பள்ளிகளில் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட பள்ளியை கண்டுபிடித்தனர்.
மது அருந்தியவர், தங்கள் பள்ளி மாணவி என்பதை மறுத்த பள்ளி நிர்வாகம், அதிகாரிகளின் எச்சரிக்கையை தொடர்ந்து, மாணவியின் முகவரியை கொடுத்தனர். இதேபோல், பள்ளியின் பெயரையும், போலீசார் சரியாக தெரிந்து கொள்ளாமல், கோவையில் உள்ள பிரபல தனியார் பள்ளியின் பெயரை கூறிவிட்டனர். ஆனால், அதிகாரிகள் விசாரணையில், அந்த மாணவி படித்தது மற்றொரு பள்ளி என, தெரிய வந்தது.


மாணவ, மாணவியர் மது அருந்த பெற்றோரே காரணம்

'மாணவ, மாணவியர் மது அருந்த, பெற்றோரே முக்கிய காரணம். 'டாஸ்மாக்'குகளில் விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும்' என, கல்வியாளர்கள் கோரிக்கை 
விடுத்துள்ளனர்.பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து, கல்வியாளர்கள், குழந்தைகள் கூர்நோக்க குழுமத்தின் உறுப்பினர்களுக்கு, சமூக பாதுகாப்புத் துறை சார்பில், சென்னையில் நேற்று பயிற்சி நடந்தது.
துறை இயக்குனர் லல்வேனா தலைமையில் நடந்த பயிற்சி அரங்கில், மாணவ, மாணவி
யரிடையே வளரும் போதைப் பழக்கம் குறித்து, அதிகமாக விவாதிக்கப்பட்டது.பள்ளி மாணவ, மாணவியர் மது போதைக்கு அடிமையாவதற்கு முக்கியக் காரணம், பெற்றோரே. உயர்தட்டு மற்றும் அடித்தட்டு வகை பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் கண்முன்னே மது அருந்துவது, அவர்களை மது பாட்டில் மற்றும் மது அருந்துவதற்கான, இதர நொறுக்குத் தீனி எடுத்து வரச் சொல்வது போன்றவற்றால், அந்தப் பிள்ளைகளும் மதுப்பழக்கத்துக்கு ஆளாகி விடுகின்றன என்று, கல்வியாளர்கள் புகார் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கப் பொதுச் செயலர் நந்தகுமார், கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் கூர்நோக்கக குழுமத் தலைவர், வின்சென்ட் சுந்தராஜ் கூறியதாவது:
பள்ளி மாணவ, மாணவியர் போதைப் பழக்கத்துக்கு அடிமையாவது ஆபத்தானது. எனவே அவர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கும் வகையில், என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என, ஆலோசிக்கப்பட்டது.
பள்ளி அருகே, போதைப் பொருள் மற்றும் பான்பராக் போன்றவற்றின் விற்பனையைக் கட்டுப்படுத்த வேண்டும். பள்ளிக்கு செல்லும் ஏழை குழந்தைகளை கடத்துதல், அவர்களை பணிக்கு அனுப்புதல் போன்ற சூழலைத் தவிர்க்க, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை, முழுமையாக அரசு அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.தந்தையால், 10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்: சமூக பாதுகாப்புப் பயிற்சி அரங்கில் பள்ளி மாணவியர் கர்ப்பம் ஆவதைத் தடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஓசூரில் தந்தையால், 10ம் வகுப்பு மாணவி கட்டாய பலாத்காரம் செய்யப்பட்டு, அந்த மாணவி தற்போது, 6 மாத கர்ப்பமாக இருக்கிறார்.இரும்புத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியின் தந்தை, மகளை பள்ளிக்கு விடுப்பு எடுக்க வைத்து, மிரட்டி பலாத்காரம் செய்து வந்ததைக் கண்டு
பிடித்து உள்ளனர். தற்போது, பலாத்காரம் செய்த தந்தை சிறையிலும், அந்த மாணவி, கிருஷ்ணகிரி குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டியில் வைக்கப்பட்டு உள்ளதாகவும், அவர் சமீபத்தில் நடந்து முடிந்த, 10ம் வகுப்புத் தேர்வில், 397 மதிப்பெண் பெற்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png