தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல்முதல்வர் அலுவலகத்தில் புகார்
அதிக கட்டணம் வசூலிக்கும், தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முதல்வர் தனிப் பிரிவில், மனு கொடுக்கப்பட்டுள்ளது.ஆசான் மெமோரியல் பள்ளி பெற்றோர், மாணவர் நலச் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: சென்னையில், ஆசான் சீனியர் செகன்டரிப் பள்ளி, குமரன் ஆசான் மெட்ரிகுலேஷன் பள்ளி, ஆகியவை, ஆசான் மெமோரியல் அசோசியேஷன் சார்பில், 50 ஆண்டுகளாக நடத்தப்படுகின்றன. இப்பள்ளி, நீதிபதி சிங்காரவேலர் நிர்ணயித்த கட்டணத்தை விட, பல மடங்கு அதிக கல்வி கட்டணத்தை வசூலிக்கிறது.
இது, விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது. எனவே, நீதிபதி சிங்காரவேலர், பள்ளி நிர்வாகம் மீது, நடவடிக்கை எடுக்கும்படியும், கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் வசூலிக்கும்படியும், கடந்த மாதம், 29ம் தேதி உத்தரவிட்டார்.மேலும், 2013 - 15ல், அதிகப்படியாக வசூலித்த கல்விக் கட்டணத்தை, பெற்றோரிடம் திருப்பி அளிக்கும்படி உத்தரவிட்டார். ஆனால், பள்ளி நிர்வாகம், அந்த உத்தரவை மதிக்காமல், அதிகப்படியான கல்வி கட்டணத்தை, தொடர்ந்து வசூல் செய்கிறது. இது கமிட்டி அளித்த உத்தரவை, அவமதிக்கும் செயலாகும்.மேலும், பெற்றோரை வகுப்பு வாரியாக அழைத்து, 'அதிகப்படியாக வசூலித்த தொகையை, திருப்பி கொடுக்க முடியாது. இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணமாக, பள்ளி நிர்ணயித்த கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லையெனில், மாணவர்களிடம் பாகுபாடு காட்டப்படும்' என, மிரட்டுகின்றனர்.எனவே, சட்டத்தை மதிக்காத, பள்ளி நிர்வாகம் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.