!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

ஞாயிறு, 12 ஜூலை, 2015

வீடுகளில் மேற்கூரை சூரிய சக்தி மின் நிலையம்

சூரிய சக்தி மின்சாரத்திற்காக, புதிய மின் இணைப்பில், 'நெட்' மீட்டர் வழங்க, தமிழ்நாடு மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.'நெட்' மீட்டர்தமிழகத்தில், வீடுகளில், மேற்கூரை சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்கி வருகின்றன. 'வீடுகளில் பயன்படுத்தியது போக, எஞ்சிய சூரிய சக்தி மின்சாரத்தை, தமிழ்நாடு மின் வாரியத்திற்கு வழங்க, 'நெட்' மீட்டர் பொருத்தலாம்' என, 2013ல், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்தது.இந்த மீட்டர், சூரிய சக்தி மின்சாரம் எவ்வளவு பயன்படுத்தப்பட்டது; மின் வாரியத்திற்கு வழங்கப்பட்ட மின்சாரம் எவ்வளவு என்பதை துல்லியாக கணக்கிட உதவும்.மின் வாரியம் சார்பில், தற்போது, 1,000 வீடுகளில், 'நெட்' மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலை, ஒரு முனை மின் இணைப்பு, 3,500 ரூபாய்; மும்முனை, 7,500 ரூபாய் என்றளவில் உள்ளது.புதிய வீடு கட்டும் போது, புதிய மின் இணைப்பில், 'நெட்' மீட்டர் வழங்க, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.இதற்காக, புதிய இணைப்பிற்கு, ஒரு விண்ணப்பம்; 'நெட்' மீட்டருக்கு, ஒரு விண்ணப்பம் என, இரண்டு விண்ணப்பம் பெறப்படும்.'டெடா' மூலம்...இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வீடுகளில், சூரிய சக்தி மின் நிலையம் அமைப்பதற்கான மானியம், தமிழ்நாடு எரிசக்தி மேம்மாட்டு முகமையான, 'டெடா' மூலம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே மின் இணைப்பு பெற்றுள்ள வீடுகளில் மட்டும், பழைய மீட்டரை எடுத்த பின், 'நெட்' மீட்டர் வழங்கப்படுகிறது.
அனுமதிபுதிய மின் இணைப்பில், 'நெட்' மீட்டர் வழங்குவது குறித்து, 'டெடா' மற்றும் மின் வாரிய அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். 'நெட்' மீட்டருக்கு, ஒரே விண்ணப்பம் வழங்க, ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கேட்கப்படும். அனுமதி கிடைத்த பின், ஒரே விண்ணப்பத்தில், புதிய மின் இணைப்பில், 'நெட்' மீட்டர் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

எத்தனை பேர்?
காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகில், தனியார் கட்டுமான நிறுவனம், 450 வீடுகள் கொண்ட, அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வருகிறது. இந்த வீடுகளில், சூரிய சக்தி மின் நிலையம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக, புதிய மின் இணைப்பில், 'நெட்' மீட்டர் வழங்க கோரி, அந்த நிறுவனம், மின் வாரியத்திடம் விண்ணப்பம் அளித்துள்ளது. இதேபோல், பலரும் விண்ணப்பம் அளித்து வருகின்றனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png