!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 15 ஜூலை, 2015

டி.ஆர்.பி., பெயரில் வசூல் வேட்டை
அரசு கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியராக தேர்வு செய்யப்பட்டுள்ள, ?,??? பேருக்கு பணி நியமன ஆணை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டி.ஆர்.பி., பெயரால், இடைத்தரகர்கள் வசூலில் இறங்கியுள்ளதால், பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.


கடந்த, 2012 நிலவரப்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக இருந்த, உதவிப் பேராசிரியர் பணிக்கு, 1,093 பேரை நியமிக்க, 2013ல் டி.ஆர்.பி., சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தேர்வானோரின் முடிவுகள், கடந்த ஏப்ரலில் வெளியாயின. ஆனால், பணி நியமன ஆணை வழங்குவது தொடர்ந்து தாமதமாகிறது. இதனால், உதவிப் பேராசிரியராக தேர்வானோர், கடந்த வாரம், டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இவர்களுக்கு, நேற்று பணி நியமன ஆணை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது; ஆனால், இந்த நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையில், எந்த கல்லூரி, எந்த ஊர் நியமனம் என்ற விஷயத்தில், இடைத்தரகர்கள் சிலர், வசூல் வேட்டை நடத்துவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, தேர்வானோர் கூறியதாவது:எங்களில் பலருக்கு, போனில் தொடர்பு கொள்கின்றனர். சிலர், டி.ஆர்.பி., அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், சிலர், கல்லூரிகள் இயக்குனரகத்தில் இருந்து பேசுவதாகவும் கூறி, சென்னைக்கு வரும்படி அழைக்கின்றனர். ஆனால், டி.ஆர்.பி., அலுவலகத்திலோ, 'நாங்கள் அழைக்கவில்லை' என்கின்றனர். அதேநேரம், இடைத்தரகர்கள் எங்களை அணுகி, 'எந்த கல்லூரியில், எந்த ஊரில் நியமனம் வேண்டும்; நாங்கள் ஏற்பாடு செய்கிறோம். ஆனால், விரும்பிய இடம் கிடைக்க, மேலிடம் வரை செலவு செய்ய வேண்டும்' என்கின்றனர். எனவே, இடைத்தரகர்கள் குறித்து, டி.ஆர்.பி., விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png