!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 15 ஜூலை, 2015

இடமாறுதலில் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொள்ள வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு
குடும்ப சூழ்நிலை, குழந்தை படிப்பை கருதி தற்போதுள்ள இடத்தில் வன ஊழியரை பணிபுரிய அனுமதிப்பது தவறல்ல. இடமாறுதலை ரத்து செய்யுமாறு உரிமையாக கோர முடியாது,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருநெல்வேலி செல்தில்குமார் தாக்கல் செய்த மனு:சிவகிரி வனச்சரகத்தில் வனவராக பணிபுரிகிறேன். என்னை துாத்துக்குடிக்கு இடமாறுதல் செய்து ஜூன் 8ல் திருநெல்வேலி வனப் பாதுகாவலர் உத்தரவிட்டார். எனது ஒரு பெண் குழந்தை 2 ம் வகுப்பு படிக்கிறது.
கல்வியாண்டு நடுப்பகுதியில் உள்ளது. எனது மனைவிக்கு ஏப்.,6ல் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அவர்களை பராமரிக்க யாரும் இல்லை. டிசம்பர், ஜனவரியில் இடமாறுதல் செய்திருந்தால் தகுந்த மாற்று ஏற்பாடுகளை செய்திருப்பேன். இடமாறுதலை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார்.வனப் பாதுகாவலர், 'துாத்துக்குடியில் பணியாளர்கள் பற்றாக்
குறையால் நிர்வாகக் காரணங்களுக்காக மனுதாரரை இடமாறுதல் செய்தோம். இவர் சிவகிரி சரகத்தில் பணிபுரிந்தாலும் திருநெல்வேலியில் தங்கியுள்ளார். அங்கிருந்து தினமும் 103 கி.மீ.,துாரம் சிவகிரிக்கு பயணம் செய்கிறார். மாறுதல் செய்யப்பட்ட இடத்திற்கு 52 கி.மீ.,பயணம் செய்தால் போதும். இதைக் கருதியே இடமாறுதல் செய்தோம்,' என பதில் மனு தாக்கல் செய்தார்.நீதிபதி: மனுதாரரை நிர்வாகக் காரணங்களுக்காக இடமாறுதல் செய்துள்ளனர். அதில் உள்நோக்கம் இல்லை. மனுதாரரின் குடும்ப சூழ்நிலை, குழந்தை படிப்பை கருதி தற்போதுள்ள இடத்தில் 2016 ஜூன்வரை பணிபுரிய அனுமதிப்பது தவறல்ல. 
இடமாறுதலை 2016 ஜூன்வரை ஒத்திவைக்க திருநெல்வேலி வனப் பாதுகாவலர், மாவட்ட வன 
அலுவலரிடம் மனுதாரர் மனு அளிக்க வேண்டும். இடமாறுதலை ரத்து செய்யுமாறு உரிமையாக கோர முடியாது. மனிதாபிமான அடிப்படையில் அவரது கோரிக்கையை அதிகாரிகள் பரிசீலிக்கலாம். வழக்கு முடிக்கப்படுகிறது என்றார். மனுதாரர் வழக்கறிஞர் எஸ்.கடற்கரை ஆஜரானார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png