!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 15 ஜூலை, 2015

பதவி உயர்வு கலந்தாய்வில் அமைச்சர் தலையீடா ஆவணங்கள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
'பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வில் அமைச்சரின் தலையீடு உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய அரசுத்தரப்பில் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
கோவில்பட்டி எல்லப்ப ஜெயக்குமார் 1988 ல் தொழுநோய் ஆய்வாளர் பணியில் சேர்ந்தார். சுகாதார ஆய்வாளர் (கிரேடு 1 பி) பதவி உயர்வு பெற்று சிவகங்கை மருத்துவப் பணி இணை இயக்குனர் அலுவலகத்தில் பணிபுரிந்தார்.
எல்லப்ப ஜெயக்குமாருக்கு 2014 ல் மருத்துவம் சாராப் பணி மேற்பார்வையாளர் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. துாத்துக்குடி நாகலாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டார். அவரை சிவகங்கை மருத்துவப் பணி இணை இயக்குனர் ஜன., 28 ல் விடுவித்தார். கோவில்பட்டி சுகாதாரப் பணி இணை இயக்குனர் பிப்.,2ல் எல்லப்ப ஜெயக்குமாரின் பதவி உயர்வு இடமாறுதலை ஏற்க மறுத்தார்.
எல்லப்ப ஜெயக்குமார்,'மருத்துவம் சாரா பணியிடத்தில் வேறு யாரையும் நியமிக்கக்கூடாது. அனுமதிக்கப்பட்ட இடத்தில் பணியில் சேர அனுமதிக்க உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இவரைப்போல் 12 பேர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார்.எல்லப்ப ஜெயக்குமாரின் வழக்கறிஞர் ரமேஷ்குமார்,' ஏற்கனவே நீதிமன்ற இடைக்கால உத்தரவால் மாறுதல் செய்யப்பட்ட இடத்தில் மனுதாரர் சேர முடியவில்லை. 7 மாதங்களாக பணி, சம்பளம் இன்றி உள்ளார்,' என்றார்.
மற்ற மனுதாரர்களின் வழக்கறிஞர்கள்,'செல்வாக்கு பெற்றவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வில் அமைச்சரின் தலையீட்டால் பலர் பணி இடங்களில் அமர்த்தப்பட்டுள்ளனர். 
மனுதாரர்களுக்கு பதவி உயர்வு அளித்திருந்தும் அவர்களை விடுவித்து உத்தரவிடவில்லை. மாறுதல் செய்யப்பட்ட பணியிடங்களில் சேர அனுமதிக்கவில்லை. பதவி உயர்வு கலந்தாய்வில் பங்கேற்ற ஒரு மனுதாரர் விரும்பிய இடம் குறித்துக்கூட அறிவிப்புப் பலகையில் குறிப்பிடவில்லை. அவருக்கு பணியில் இளையவரைக்கூட மனுதாரர் விருப்பம் தெரிவித்த இடத்தில் நியமித்துள்ளனர். இதில் அமைச்சரின் தலையீடு உள்ளது.
கலந்தாய்வு ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டால் அமைச்சரின் நேரடி, மறைமுக தலையீடு உள்ளது வெளிச்சத்திற்கு வரும்,' என்றனர்.
நீதிபதி: இப்பிரச்னை விரிவாக விவாதிக்கப்பட வேண்டியது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. அரசு வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரியுள்ளார். எல்லப்பராஜை பணியிலிருந்து விடுவித்துள்ளனர். வேலையில் சேர அனுமதிக்காததால் திரிசங்கு நிலையில் உள்ளார். அவரை மாறுதல் செய்த இடத்தில் பணியில் சேர அனுமதிக்க வேண்டும். மற்ற மனுதாரர்களைப் பொறுத்தவரை பணிமூப்பு அடிப்படையில் தற்போது பணிபுரியும் இடத்திலிருந்து விடுவிக்க வேண்டும்.
பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வில் அமைச்சரின் தலையீடு உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய அரசுத்தரப்பில் ஆவணங்களை ஆக.,3 ல் தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png