!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 31 ஜூலை, 2015

சி.பி.எஸ்.இ., ஆசிரியர் 'டெட்' தேர்வு அறிவிப்பு
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில் பணிபுரிவதற்கான, மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு, செப்., 20ல் நடக்கிறது. இதற்கு அடுத்த மாதம், 19ம் தேதி வரை ஆன் - லைனில் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, நவோதயா போன்ற சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகள் மற்றும் தகுதித்தேர்வு நடத்தாத, மாநில அரசு பள்ளிகளில், ஆசிரியர்களாக சேர, மத்திய தகுதித்தேர்வு (டெட்) எழுதி, தேர்ச்சி பெறவேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு, வரும், செப்., 20ல் நடக்கும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துஉள்ளது. 
ஒன்று முதல் 5ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான முதள் தாள், பிற்பகல், 2:00 மணி முதல் மாலை, 4:30 வரையும்; 6 முதல் 9ம் வகுப்பு வரையில் பணிபுரிய விரும்பும் ஆசிரியர்களுக்கான, 2ம் தாள், 
காலை, 9:30 முதல் நண்பகல், 12:00 வரையும் நடக்கிறது. இந்தத் தேர்வு எழுத,- www.ctet.nic.in என்ற இணையதளத்தில், நேற்று முதல், அடுத்த மாதம், 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டண இ-ரசீதை, ஆக., 20ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இந்த தேர்வுக்கான 'ஆன் - லைன்' ஹால் டிக்கெட்டை செப்., 4ல், பதிவிறக்கம் செய்யலாம். கூடுதல் விவரங்களை, www.ctet.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png