!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 17 ஜூலை, 2015

கட்டாய தலைக்கவச உத்தரவு: ஆவணங்களை பறிமுதல் செய்வதற்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு


தலைக்கவசம் அணியாமல் செல்பவர்களின் ஆவணங்களை பறிமுதல் செய்வதற்குத் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் தலைக்கவசம் அணிய கட்டாயப்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தனி மனுவாக தாக்கல் செய்யுமாறும் நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.
 வழக்கின் பின்னணி: இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் வேன் மோதி பலியான சம்பவத்தில், மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், "ஜூலை 1-ஆம் தேதி முதல் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்' என்று உத்தரவிட்டார்.
 இந்த நிலையில், இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜரானர். 
 மேலும் இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், சமூக ஆர்வலர் நிம்மு வசந்த் உள்ளிட்டோரும் வாதிட்டனர்.
 ஆர்.சி.பால்கனகராஜ்: கடந்த 2007-ஆம் ஆண்டு அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால், அந்த உத்தரவில் இரு சக்கர வாகனத்தின் பின்புறத்தில் அமர்ந்து செல்பவர்களுக்கு சில விதிவிலக்குகள் அளிக்கப்பட்டன. அதன்படி, பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோருக்கு விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது அனைவரும் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
 எனவே, பெண்கள், 12 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு தலைக்கவசம் அணிவதிலிருந்து விதிவிலக்கு அளிக்க உத்தரவிட வேóண்டும். மேலும், முந்தைய உத்தரவின்போது பொதுமக்களிடமிருந்தும் கருத்துகள் கேட்கப்பட்டன. அதுபோல தற்போதும் மக்களின் கருத்தைக் கேட்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
 இதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிப்பதோடு, பொதுவான மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி அதன்மூலம் மக்களின் கருத்தைக் கேட்கலாம்.
 இதுதவிர, தலைக்கவசம் அணியாதவர்கள் பிடிபட்டு, நடமாடும் நீதிமன்றங்கள் முன்பு நிற்க வைக்கப்பட்டு அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே போலீஸாரிடமே அபராதம் செலுத்திவிட்டுச் செல்ல உத்தரவிட வேண்டும் என்றார்.
 அரசு வழக்குரைஞர் அரவிந்த் பாண்டியன்: தலைக்கவசம் அணியாதவர்கள் மீது பதிவு செய்யப்படும் வழக்குளை விரைவாக முடிப்பதற்காக மாலை நேரத்திலும், சனிக்கிழமையிலும் நீதிமன்றங்களை நடத்த உத்தரவிட வேண்டும் என்றார்.
 சமூக ஆர்வலர் நிம்மு வசந்த்: தலைக்கவசம் அணிவது தொடர்பாக போலீஸாரின் கெடுபிடிகள் அதிகமாக உள்ளன. ஆவணங்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கை அதிகபட்சமானது. எனவே, தலைக்கவசம் அணியாதவர்களின் ஆவணங்களைப் பறிமுதல் செய்வதற்கு அடுத்த விசாரணை வரை இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
 இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி கிருபாகரன், ஆவணங்களைப் பறிமுதல் செய்தவற்கு தடை விதிக்க முடியாது என்றார். மேலும், தலைக்கவச வடிவமைப்பில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தேன். அதன் நிலை என்ன என்று அவர் கேள்வி எழுப்பினார்.
 இதற்கு பதிலளித்த மத்திய அரசுத் தரப்பு வழக்குரைஞர், இதுகுறித்து மத்திய தரை வழிப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம். ஆனால் இன்னும் பதில் வரவில்லை என்றார்.
 விவாதத்துக்குப் பிறகு, பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் தலைக்கவசம் அணிய கட்டாயப்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் மனுவாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு கூறிய நீதிபதி, வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png