!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 17 ஜூலை, 2015

தலைமை ஆசிரியர் பணி நியமனம் : தவறான தகவலுக்கு ரூ. ஒரு லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
லைமை ஆசிரியர், தாளாளர் பணி பற்றி தவறான தகவல் அளித்த இருவருக்கு தலா 50 ஆயிரம் வீதம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.

விளவங்கோடு அருகே அரசு உதவி பெறும் அருமனை மேல்நிலை பள்ளியில் கிஷோர் சந்த் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார். ஓய்வு பெற்றபின் பிரதிபாவை தலைமை ஆசிரியராக பள்ளி நிர்வாகம் நியமித்தது.''அவருக்கு 10 ஆண்டுகள் கற்பித்தல் முன் அனுபவம் இல்லை,'' என கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நிராகரித்தார். பிரதிபா, ''ஒரு பல்கலையில் முதுநிலை விரிவுரையாளராக பணிபுரிந்துள்ளேன். இதை கணக்கில் கொண்டால் 10 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளது. அந்த அனுபவத்தை கருத்தில் கொள்ளவில்லை. முதன்மைக் கல்வி அலுவலரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,'' என உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.
நீதிபதி எஸ்.வைத்தியநாதன்: 
பல்கலையில் பணிபுரிந்த நல்ல முன் அனுபவம் பிரதிபாவிற்கு உள்ளது. கிஷோர் சந்த்,''பிரதிபாவிற்கு போதிய கல்வித் தகுதி இல்லை. அவரது பணி நியமனத்தை அங்கீகரிக்கக்கூடாது,'' என மற்றொரு மனு செய்துள்ளார். அவர் ஏற்கனவே ஓய்வு பெற்றதால் இதில் கேள்வி எழுப்ப முடியாது. பிரதிபா மனுவில் கிஷோர் சந்தை எதிர்மனுதாரராக இணைத்துள்ளார்.கிஷோர் சந்த், ''பிரதிபா பல உண்மைகளை மறைத்துள்ளார். நீதிமன்றத்தில் தவறான தகவல் அளித்துள்ளார்,'' என தெரிவித்துள்ளார்.கிஷோர்சந்த் 2012 செப்.,30 ல் ஓய்வு பெற்றுள்ளார். ஆனால் அவருக்கு 2013 மே 31 வரை பணி நீட்டிப்பு செய்துள்ளனர். பிரதிபாவிற்கு 2012 அக்.,1 ல் தலைமை ஆசிரியராக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 
இந்த உத்தரவு செயல்படுத்தப்படவில்லை. ஆனால் 2012 அக்., 1 முதல் 2013 மே 31 வரையிலான காலத்தையும் சேர்த்து 10 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளதாக பிரதிபா தெரிவித்துள்ளார். பிரதிபாவிற்கு போதிய தகுதி இருந்தும் தவறான தகவல் அளித்துள்ளார்.பள்ளி தாளாளர் சரஸ்வதி. இவரது மகன் கிஷோர் சந்த். சரஸ்வதியின் பேத்தி பிரதிபா. சரஸ்வதியை பதவியிலிருந்து நீக்கி, பள்ளி நிர்வாகம் தனது கட்டுப்பாட்டில் உள்ளது போல் கிஷோர்சந்த் தவறான ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளார்.பிரதிபா தலைமை ஆசிரியர் பணிக்கு தகுதியான நபர் தான். தவறான தகவல் அளித்ததால் பிரதிபா சிறந்த கல்வியாளர் அல்ல. தவறான ஆவணங்களை தாக்கல் செய்ததால் அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன். தொகையை மதுரை சர்வேயர் காலனி முனாவர் பெண்கள் ஆதரவற்றோர் இல்லத்திற்கு செலுத்த வேண்டும். கிஷோர் சந்த்தை மன்னிக்கத் தயாரில்லை. அவரது மனுவை தள்ளுபடி செய்கிறேன். அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன். தொகையை மதுரை ஜவஹர் ரோடு பாலர் இல்லத்திற்கு செலுத்த வேண்டும்.நீதிமன்றம் என்பது நீதிக்கோயில். நீதி என்பது கோயிலை விட மேலானது. முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பிரதிபாவை ஜூன் 1 முதல் தலைமை ஆசிரியராக நியமிக்க வேண்டும். இருவரும் அபராதத்தை செலுத்தத் தவறினால், வசூலிக்க உயர்நீதிமன்ற பதிவுத்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கற்பிக்கும் தொழில் உன்னதமானது. பிரதிபா தலைமை ஆசிரியர் பணிக்கு தகுதியானவராக இருந்த போதிலும், எவ்வாறு மாணவர் சமுதாய மேம்பாட்டிற்கு தனது பங்களிப்பை தருவார் என்பது பற்றி இந்நீதிமன்றம் அச்சப்படுகிறது. கல்வி என்பது தகுதியிலிருந்து வேறுபட்டது. வெறுமனே காகிதம், விதிகளை பார்த்து பிரதிபாவிற்கு நிவாரணம் அளித்துள்ளேன். மனசாட்சிப்படி என்னால் உத்தரவு பிறப்பிக்க முடியவில்லை என்றார். அரசு சிறப்பு வழக்கறிஞர் வி.முருகானந்தம் ஆஜரானார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png