வெளிநாடு சென்ற ஆசிரியை சம்பளம் 'கட்'
அரசு அனுமதியின்றி விடுப்பில் அமெரிக்கா சென்றதாக உதவி பெறும் பள்ளி ஆசிரியைக்கு சம்பளம் மறுத்த கல்வித்துறை உத்தரவை தனி நீதிபதி ரத்து செய்தார். இதை எதிர்த்த அரசின் மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.பரமக்குடி விஜயலட்சுமி. இவர் பரமக்குடியில் அரசு உதவி பெறும் பாரதியார் நடுநிலை பள்ளியில்
இடைநிலை ஆசிரியையாக பணிபுரிகிறார். இவரது மகள் அமெரிக்காவில் வசிக்கிறார். அவர் கர்ப்பிணியாக இருந்தபோது உதவி செய்ய 2014ல் விடுப்பில் விஜய லட்சுமி அமெரிக்கா சென்றார். 2014 செப்.,15ல் மீண்டும் பணியில் சேர்ந்தார்.பரமக்குடி உதவி துவக்கக் கல்வி அலுவலர், ''துவக்கக் கல்வி இயக்குனரின் ஒப்புதலின்றி 97 நாட்கள் விடுமுறையில் சென்றதால், அதற்குரிய சம்பளம் அனுமதிக்க முடியாது,'' என உத்தரவிட்டார்.இதை எதிர்த்து விஜயலட்சுமி உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.தனி நீதிபதி: வெளிநாட்டிற்கு விடுப்பில் செல்ல அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவு அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் பொருந்தும். அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களைப் பொறுத்தவரை, பள்ளி கல்விக்குழுவிடம் அனுமதி பெற்றால் போதுமானது.
மனுதாரர், பள்ளி கல்விக்குழுவின் அனுமதியுடன் வெளிநாடு சென்றுள்ளார். இதை பள்ளி நிர்வாகம் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளது. உதவி துவக்கக் கல்வி அலுவலரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்றார்.இதை எதிர்த்து துவக்கக் கல்வி இயக்குனர், பரமக்குடி உதவி துவக்கக் கல்வி அலுவலர் மேல்முறையீடு செய்தனர்.
நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஜி.சொக்கலிங்கம் கொண்ட அமர்வு,' தனி நீதிபதியின் உத்தரவில் தலையிடுவதற்கான முகாந்திரம் இல்லை. மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,' என்றது. விஜயலட்சுமி தரப்பு வழக்கறிஞர் ஈ.வி.என்.சிவா ஆஜரானார்.

0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.