!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 20 ஜூலை, 2015

ஆள் பிடிக்கும் வேலையில் வருமானவரி துறை: ஒரு கோடி பேரை வரி கட்ட வைக்க தீவிரம்
நடப்பு நிதியாண்டிற்குள், ஒரு கோடி பேரை, தன் வரி வளையத்திற்குள் கொண்டு வர, வருமானவரி துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதிகபட்சமாக, புனேவில், 10 லட்சம் பேரையும், தமிழகத்தில், 7.6 லட்சம் பேரையும், வரி வளையத்தில் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


வரி துறையின் கொள்கைகளை நிர்ணயிக்கும் அமைப்பாக, சி.பி.டி.டி., எனப்படும், மத்திய நேரடி வரிகள் வாரியம் இருக்கிறது. சமீபத்தில், மத்திய அரசு நடப்பு நிதியாண்டிற்குள், புதிதாக, 1 கோடி பேரை வருமான வரி வளையத்திற்குள் கொண்டு வருமாறு, சி.பி.டி.டி., நிர்வாகிகளை கேட்டுக் கொண்டது. அரசின் உத்தரவை நிறைவேற்றும் வகையில், அனைத்து களப்பணிகளையும் சி.பி.டி.டி., துரிதப்படுத்தி உள்ளது. 

பிராந்தியங்கள்:



நாடு முழுவதும், வருமான வரி, சொத்து வரி, பெரிய நிறுவனங்கள் செலுத்தும், அட்வான்ஸ் வரி போன்றவற்றை வசூலிக்க வசதியாக, வரித் துறையின் கீழ், 18 பிராந்தியங்கள் உள்ளன. இவை, நடப்பு நிதியாண்டில் எத்தனை பேரை, வரி வளையத்திற்குள் புதிதாக சேர்க்க வேண்டும் என்ற இலக்கை, சி.பி.டி.டி., நிர்ணயித்துள்ளது. நாட்டில் அதிகபட்சமாக, மகாராஷ்டிர மாநிலம் புனேவில், 10.14 லட்சம் பேரை புதிதாக வரி வளையத்தில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப் மற்றும் அரியானா ஆகியவற்றை கொண்ட வடமேற்கு மாநிலங்கள், 9.30 லட்சம் பேரையும், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள், 7.93 லட்சம் பேரையும், வரி வளையத்தில் சேர்க்க வேண்டும். குஜராத் பிராந்தியத்துக்கு, 7.86 லட்சம், தமிழகத்திற்கு, 7.64 லட்சம், சிக்கிம் மற்றும் மேற்கு வங்கத்திற்கு, 6.91 லட்சம் பேர் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
மும்பை பிராந்தியத்தில், 6.23 லட்சம், டில்லியில், 5.32 லட்சம் பேர் வரி வளையத்தில் சேர்க்கப்பட வேண்டும். 

இப்பணியை நிறைவேற்ற, 'வர்த்தக சங்கங்கள், தொழில் அமைப்புகள் போன்றவற்றுடன் அடிக்கடி கூட்டங்கள் நடத்தி, தக்க வழிமுறைகளை ஆராய வேண்டும். வருவாயை குறைத்து காட்டி, வரி செலுத்தாமல் ஏய்த்து வருவோர் பற்றிய விவரங்களை, நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி கண்டறிய வேண்டும்' என, வருமானவரி துறைக்கு சி.பி.டி.டி., உத்தரவிட்டுள்ளது. ஊழியர்களிடம் டி.டி.எஸ்., எனப்படும் வரி வசூலித்து, வருமானவரி துறைக்கு செலுத்தாத நிறுவனங்கள், பெரியளவில் வருவாய் ஈட்டி, வரி செலுத்தாமல் ஏய்த்து வரும் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு எதிராக வெறும் அபராதம் மட்டும் விதிக்காமல், நீதிமன்றத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறும், சி.பி.டி.டி., கூறியுள்ளது. 


வளையத்தில்...:



இதுகுறித்து, சி.பி.டி.டி., மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:வருமானவரி வளையத்திற்குள் புதியவர்களை சேர்க்கும் திட்டம், கடந்த மே மாதம் முறைப்படி துவக்கப்பட்டது. அப்போது, நாடு முழுவதும், ஒவ்வொரு மாதமும், குறைந்த பட்சம், 25 லட்சம் பேரை, வரி வளையத்தில் கொண்டு வரவேண்டுமென, அரசு தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டது. தற்போது, நடப்பு நிதியாண்டில் எட்டு மாதங்களே மீதம் உள்ளன. எனவே, 1 கோடி பேரை வரி வளையத்தில் இணைக்க திட்டமிடப்பட்டது. வரி வசூல் வசதிக்காக, நாடு முழுவதும், 18 பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் வருவாய் செலுத்தும் திறன் அடிப்படையில், அவை, வரி வளையத்திற்குள் கொண்டு வர வேண்டிய நபர்களின் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டது. 127 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில், 4 கோடி பேர் மட்டுமே வரி செலுத்துகின்றனர். இது, 4 சதவீதத்திற்கும் குறைவு. வரிகள் மூலம் நிதியாதாரம் திரட்டப்பட்டால் மட்டுமே, அரசின் பொது நலத் திட்டங்களை நிறைவேற்ற முடியும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.


கதவை தட்டலாம்!



அதிக வருவாய் ஈட்டியும், வரி செலுத்தாமல் ஏய்த்து வரும் தனி நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும், வருமானவரி துறை குறிவைத்து காய்களை நகர்த்தி வருகிறது. இதனால், வரி ஏய்ப்பாளர்களின் வீட்டுக் கதவு களை, வரித்துறை அதிகாரிகள் எந்நேரமும் தட்டலாம் என்ற நிலை உருவாகி உள்ளது.


வருமான வரித்துறை எச்சரிக்கை:



'வரி செலுத்துவோர் தொடர்பாக, வெளிநாடுகளிடமிருந்து பெறப்படும் ரகசிய தகவல்களை அனுமதியின்றி வெளிப்படுத்தினால், கடும் தண்டனைக்கு ஆளாக நேரிடும்' என, சி.பி.டி.டி., எச்சரித்துள்ளது. இதுகுறித்து, சி.பி.டி.டி., அதிகாரிகள், டில்லியில் நேற்று கூறியதாவது:வெளிநாடுகளில் சொத்துகள் மற்றும் வங்கி கணக்குகள் வைத்துள்ள இந்தியர்கள் பற்றிய தகவல்கள் சமீபகாலமாக நமக்கு அதிகளவில் கிடைக்கத் துவங்கி உள்ளன. 
வரி ஏய்ப்பு தொடர்பான, இதுபோன்ற ஆதாரங்கள், இந்திய அரசு அதிகார வரம்புக்கு வெளியில் இருந்து பெறப்படுபவை. இரு நாடுகள் இடையிலான ஒப்பந்தங்கள், பன்னடுக்கு ஒத்துழைப்பு போன்றவை மூலம் பெறப்படும் இத்தகவல்களை பகிரங்கமாக வெளிப்படுத்துவது, நாடுகள் இடையிலான பரஸ்பர ஒப்பந்தங்களை மீறுவதாகும். அமெரிக்க அரசிடமிருந்தும், இந்தியாவைச் சேர்ந்த வரி ஏய்ப்பாளர்கள் குறித்த தகவல்கள், விரைவில் நமக்கு கிடைக்க உள்ளன. 
இவ்வாறு பெறப்படும் ரகசிய தகவல்களை பாதுகாக்க, எல்.ஐ.எஸ்.சி., எனப்படும் உள்நாட்டு தகவல் பாதுகாப்பு கமிட்டி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.வெளிநாடுகளிடம் பெறப்படும் தகவல்களை அனுமதியின்றி வெளியிடும் சம்பவம் நிகழ்ந்தால், அதுபற்றி, எல்.ஐ.எஸ்.சி., உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்.  இவ்வாறு சி.பி.டி.டி., அதிகாரிகள் கூறினர். 

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png