'அரசு துறைகளில் பாலியல் சீண்டல் அதிகம்'
'தமிழக அரசு துறைகளில், பாலியல் சீண்டல்கள் அதிகமாக உள்ளன; இதற்கு, அதிகாரிகளே உடந்தையாக உள்ளனர்,'' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வி குற்றம் சாட்டினார்.
ஊட்டியில், அவர், நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக அரசு துறைகளில், காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுவதில்லை; இதனால், புதிய வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. அமைச்சர்களின் மிரட்டல்களால், நேர்மையான அதிகாரிகள் பழிவாங்கப்படுகின்றனர். அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,), முழுமையான காலியிட விவரங்களை பெற்று, அவற்றை நிரப்பினால், 1.5 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்.
வணிகவரித் துறையில் காலியாக உள்ள, 4,000 பணியிடங்களை நிரப்பி, அந்த துறையை செம்மைப்படுத்தினாலே, மதுவிலக்கை அமல்படுத்த முடியும். இலவசம் தேவையில்லை; வேலை வாய்ப்பை உருவாக்கினால் போதும். அரசு துறைகளில், பாலியல் சீண்டல்கள் அதிகம். இதற்கு, அதிகாரிகளே உடந்தையாக உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தீர்வு கிடைப்பதில்லை. மாறாக, இடமாற்றம், தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.