குரூப் - 2' வினாத்தாளை 'லீக்' செய்த கைதி 'எஸ்கேப்'
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த, பத்திரகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தவமணி, 28. இவர், கடந்த, 2011ம் ஆண்டு, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, 'குரூப் - 2' வினாத்தாளை, ஈரோட்டில், 'லீக்'கான வழக்கில் கைதாகி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
டி.என்.பி.எஸ்.சி., எனப்படும், அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய, குரூப் - 2 தேர்வு வினாத்தாளை, முன்கூட்டியே, 'லீக்' செய்த, பத்திரகோட்டை தவமணி, எட்டு மாதங்களாக, போலீசார் கண்ணில் சிக்காமல், 'தண்ணி' காட்டி வருகிறார். இதனால், இனி நடக்க உள்ள தேர்வுகளின், 'கதி' குறித்து, கேள்வி எழுந்துள்ளது.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த, பத்திரகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தவமணி, 28. இவர், கடந்த, 2011ம் ஆண்டு, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, 'குரூப் - 2' வினாத்தாளை, ஈரோட்டில், 'லீக்'கான வழக்கில் கைதாகி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்தாண்டு நவம்பர், 24ம் தேதி, மகாராஷ்டிர மாநிலம், சிவாஜி நகர் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள, ஒரு கொலை வழக்கு தொடர்பாக, அம்மாநில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, திருச்சி ஆயுதப்படை போலீசார் ஐந்து பேர், தவமணியை அழைத்துச் சென்றனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, மீண்டும் ரயில் மூலம் திருச்சிக்கு வந்துகொண்டிருந்தனர். கர்நாடக மாநிலம், குல்பர்க்கா என்ற இடத்தில், ரயில் மெதுவாக வந்தபோது, ரயிலில் இருந்து குதித்து, தவமணி தப்பி ஓடி விட்டார். இதனால், ஐந்து போலீசாரும், தவமணியுடன் தொடர்பு வைத்திருந்த தாக, 'சஸ்பெண்ட்'செய்யப்பட்டனர்.
திருச்சி கன்டோன்மென்ட் உதவி கமிஷனர் அருள் அமரன் தலைமையிலான தனிப்படை போலீ சார், எட்டு மாதங்களாக, தவமணியை தேடி வருகின்றனர்; இதுவரை சிக்கவில்லை. கைதியின் இருப்பிடத்தைக்கூட கண்டுபிடிக்கமுடியாமல், போலீசார் அல்லாடிவருகின்றனர். இதனால், டி.என்.பி.எஸ்.சி., இனி நடத்த உள்ள தேர்வுகளின் வினாத்தாள்களை, முன்கூட்டியே, 'லீக்' செய்யும் வேலையில், தவமணி ஈடுபடுவாரோ என்ற பயத்தில் போலீசார் உள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.