!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

சென்னை பல்கலையில் 10 மாணவர்கள் 'சஸ்பெண்ட்'
சென்னை பல்கலை வளாகத்தில் போராட்டம் நடத்திய, 10 மாணவர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அவர்கள், பல்கலை வளாகத்துக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், எம்.ஏ., அரசியல் அறிவியல் துறை வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.சென்னை பல்கலையில் அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் ராமு மணிவண்ணனை, துறைத் தலைவர் பொறுப்பில் இருந்து, பல்கலை நிர்வாகம் மாற்றியது. அவருக்குப் பதில், மூத்த பேராசிரியர் கோடீஸ்வர பிரசாத்தை நியமித்தது.


போராட்டம்:


இதை எதிர்த்து, அரசியல் அறிவியல் துறை மாணவர்கள், 15 நாட்களாக போராட்டம் நடத்தினர். அவர்களிடம் அமைதிக்குழு நடத்திய பேச்சு தோல்வி அடைந்தது. இதையடுத்து, போராட்டம் நடத்திய, சில மாணவியர் உட்பட, 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பல்கலைக்குள் ஒழுக்கமின்றி நடந்து கொண்டது, கோஷமிட்டது, பல்கலை வளாகத்தில் அனுமதி மீறி போஸ்டர் ஒட்டியது மற்றும் பேராசிரியர் தொடர்பான நிர்வாக பிரச்னைக்காக போராடியது ஆகிய காரணங்களுக்காக, 10 பேரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த, 10 பேரும், ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் பல்கலை வளாகத்துக்குள் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது 

வகுப்புகள் ரத்து:


இதற்கிடையில், பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர, அரசியல் அறிவியல் துறையின் எம்.ஏ., முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு வகுப்புகள் மற்றும் எம்.பில்., வகுப்புகள் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன. விடுதியை காலி செய்யவும், அரசியல் அறிவியல் துறை மாணவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நடவடிக்கை இப்போது இல்லை:



பேராசிரியர் மணிவண்ணன் மீது, பேராசிரியை அளித்த புகாரின் மீது, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் விசாரணை நடந்தது. விசாரணை அறிக்கை, பல்கலையின் சிண்டிகேட்டில், மூன்று வாரங்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கைப்படி, 'மணிவண்ணன் மீது இப்போது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்' என, பல்கலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png