!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

பள்ளி மாணவன் உட்பட மூவர் விபத்தில் பலி
கோவையில் நடந்த இரு வேறு விபத்துகளில், பள்ளி மாணவன் உட்பட, மூவர் பலியாயினர்; 25 பேர் படுகாயம் அடைந்தனர்.கோவை, பிள்ளையார்புரம் நாகராஜபுரத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்; கூலித்தொழிலாளி. இவரது மகன் விக்னேஸ்வரன், 9; அரசு பள்ளியில், 3ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலை பள்ளிக்கு செல்வதற்காக, வீட்டின் முன் காத்திருந்தான்.
மாணவர்களை அழைத்துச் செல்ல வந்த தனியார் வேனை, அதன் டிரைவர் பின்னோக்கி நகர்த்தியபோது, விக்னேஸ்வரன் மீது மோதியது. படுகாயமடைந்த சிறுவனை, அங்கிருந்தோர் மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே சிறுவன் உயிர்இழந்தான். 
இதனிடையே, விபத்து ஏற்படுத்திய வேன் கண்ணாடிகளை, உறவினர்கள் அடித்து நொறுக்கினர். வேன் டிரைவர் அலெக்ஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

வேன் - பைக் மோதல்: ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டியில் இருந்து, ரங்கசாமி குடும்பத்தினர், இரண்டு வேன்களில், கோவை மதுக்கரைக்கு வந்து கொண்டிருந்தனர். கோவை, எல் அண்ட் டி புறவழிச்சாலையில், நேற்று காலை, 11:30 மணி அளவில், வேன் வந்தபோது, சாலையின் குறுக்கே திடீரென வந்த பைக் மீது மோதாமல் இருக்க, டிரைவர், வேனை திருப்பினார். எனினும், பைக் மீது வேன் மோதி, சாலையை விட்டு விலகி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது. மற்றொரு வேனில் வந்த ரங்கசாமியின் உறவினர்கள், வேனின் கண்ணாடியை உடைத்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
பைக்கில் வந்த தமிழ ழகன், 27, மற்றும் வேனில் பயணம் செய்த ரங்கசாமியின் மகன் வடிவேல், 32, ஆகியோர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். படுகாயமடைந்த, 25 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ரங்கசாமியின் மற்றொரு மகன் செல்வத்திற்கு, பெண் பார்க்க வந்தபோது, 
இந்த விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது.


Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png