அரசு பள்ளிஆசிரியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு
ஆசிரியர்களின், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசுக்கு எதிராக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், அக்டோபர், 8ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின், 24 சங்கங்கள் இணைந்து, 'ஜேக்டோ' என்ற கூட்டு நடவடிக்கைக்குழுவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்கூட்டுக்குழுவின் ஆலோசனைக் கூட்டம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் ரெங்கராஜன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், வரும் அக்டோபர், 8ம் தேதி வியாழக்கிழமை, அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களும் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டதாக, ரெங்கராஜன் தெரிவித்தார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.