!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன?

மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் கடைசியாக பங்கேற்ற மேகாலயா, ஷில்லாங், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் மாணவர்களிடம் கடைசியாக பேசியது குறித்து, மேகாலயா கவர்னர் சண்முகநாதன் நெகிழ்வுடன் கூறியதாவது: கடந்த, ஜூலை 27ம் தேதி, மாலை அப்துல் கலாம், மேகாலயா வந்தார். நான் அவரை வரவேற்றபோது, 'தமிழ் பூங்காற்று வீசுகிறது' என, வேடிக்கையாக கூறினார். எனது அறைக்கு அடுத்த அறையில் தங்கிய அவர், 'இரவு நாம் இணைந்து தோசை சாப்பிடலாம்' என, ஆசையுடன் குழந்தை போல கூறினார். பின், நாங்கள் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம்., சென்றோம். கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் தொடர்ந்து அங்கு வருகிறார். அன்று அவர் மாணவர்களிடையே பேச எடுத்துக் கொண்ட தலைப்பு 'கிரியேட்டிவ் எ லிவ்வபிள் பிளானட் எர்த்'.


இது பற்றி அவர், மேடையில் பேசியதாவது:இந்த 'பிளானட் எர்த்' மனிதர்கள் வாழக்கூடியதாக மாற்றப்பட வேண்டும். அதற்கு ஒற்றுமை வேண்டும். அமெரிக்காவில், ஹார்வேர்டு என்ற பல்கலைக்கழகம் உள்ளது. அதன் அருகிலேயே, மாசாசூசெட்சில், எம்.ஐ.டி., பல்கலைக்கழகம் உள்ளது. இரண்டு பல்கலை மாணவர்களுக்கும் இடையே, கருத்து வேறுபாடு உள்ளது. அவர்கள் ஒன்றிணைந்து வந்தால், ௨ மணிநேரம் கூட பேச தயாராக இருப்பதாக கூறினேன். அதன்படி இரு பல்கலை மாணவர்களும் ஒன்றிணைந்து வந்தனர். நான் அவர்களிடம் பேசத் துவங்கினேன்.இவ்வாறு, கலாம் பேசினார்.



அப்போது, ஒரு மாணவர் எழுந்து, 'பிளானட் எர்த்' வாழ வேண்டும் என்றால் உலகப்போரில், மக்கள் அனைவரும் அழிந்து விடுவார்களே! மூன்றாவது உலகப்போர் உருவாவதற்கான வாய்ப்பு இருக்கிறதா' என, கேள்வி எழுப்பினார். அதற்கு கலாம் பதிலளிக்கையில்,'மூன்றாம் உலகப்போருக்கான வாய்ப்பு இல்லை. ஆனால், பொருளாதாரத்தில் அசுர பலம் வாய்ந்த நாடுகள், பொருளாதாரத்தில் பலவீனமான நாடுகளை நசுக்க முயலலாம்' என்று பதிலளித்தார். அதுதான் அவரது கடைசி பதில்.அதன் பின், 'டெரரிசம்....' என்ற சொல்லை உச்சரித்தார். அப்படியே கீழே சரிந்து விழுந்தார். உடனடியாக அவரை துாக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றோம். அங்குள்ள மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றனர். ஆனால், 7:45 மணிக்கு, கலாம் உயிர் பிரிந்தது. நான் உடனடியாக பிரதமர், ஜனாதிபதிக்கு தகவல் தெரிவித்தேன்.



அவர்கள் கலாமின் உடலை டில்லிக்கு கொண்டு வரும்படி கூறினர். பிரதமர் மோடி விமான நிலையத்திற்கே நேரில் வந்து விட்டார். கலாமின் உடலை பார்த்ததும் அவர் உருகி நின்றார். அவரது கன்னங்களில், கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது. பல நிமிடங்கள் அப்படியே நின்று விட்டார்.ராமேஸ்வரத்திற்கு என்னையே செல்லும்படி பிரதமர் கூறினார். அடக்கம் செய்யும்போது, பல மாநில தலைவர்கள் கலந்து கொண்டனர். பிரதமரும் அங்கு வந்துவிட்டார். கலாம் மறைவதற்கு முன் எனக்கு ஒரு புத்தகம் கொடுத்தார். அது அவரே எழுதியது. அந்த புத்தகத்தின் பெயர் 'பியாண்டு 2020'. அந்த நுாலை அடுத்த சில நாட்களில் வெளியிடுவதாக இருந்தார். அவர் கொடுத்த அந்த புத்தகத்தைத் தான் நான் படித்துக் கொண்டிருக்கிறேன். அந்த நுால் விரைவில் வெளியிடப்பட உள்ளது.அதில், பார்லிமென்ட் நடவடிக்கைகள் தேக்கம் குறித்து ஒரு தலைப்பு உள்ளது. அதில், பல்வேறு காரணங்களால், பார்லிமென்ட் முடங்குவது, அதை சரி செய்வது எப்படி என்பது குறித்து, கலாம் எழுதி உள்ளார்.



அவரிடம், 'உங்களின் தனிப்பட்ட விருப்பம் என்ன' என்று கேட்டேன். அதற்கு கலாம், 'எனது சகோதரருக்கு 99 வயது. அவரது 100வது வயதை சிறப்பாக கொண்டாட வேண்டும். அதுதான் எனது விருப்பம். அந்த விழாவை கொண்டாட நாம் சேர்ந்து ராமேஸ்வரம் செல்லலாம்' என்றார்.இந்தியாவின் பலத்தை, ஆற்றலை அதிகப்படுத்திவர் அப்துல் கலாம். அவர் மாபெரும் மனிதர்.இவ்வாறு, மேகாலயா கவர்னர் சண்முகநாதன் தெரிவித்தார். 

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png