!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

94,500 இடங்கள் காலி : இன்ஜி. கவுன்சிலிங் நிறைவு - 1.07 லட்சம் இடங்கள் நிரம்பின

அண்ணா பல்கலை இணைப்புக்கு உட்பட்ட 536 இன்ஜி. கல்லூரிகளில் பி.இ., - பி.டெக்., மற்றும் பி.ஆர்க்., படிப்புகளுக்கு கடந்த ஒரு மாதமாக நடந்த கவுன்சிலிங் நேற்று நிறைவடைந்தது. ஒரு லட்சத்து 7,969 இடங்கள் நிரம்பியுள்ளன; 94,453 இடங்கள் காலியாக உள்ளன.அண்ணா பல்கலைக்கு உட்பட்டு 536 இன்ஜினியரிங் மற்றும் 40 பி.ஆர்க்., கல்லூரிகள் உள்ளன. பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு ஜூன் 28ல் கவுன்சிலிங் துவங்கியது.முதலில் விளையாட்டுப் பிரிவு பின் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடந்தது. ஜூலை 1 முதல் பொதுப் பிரிவு கவுன்சிலிங் துவங்கியது. கடந்த 28ம் தேதி அது முடிவடைந்தது.இதை தொடர்ந்து தொழிற்கல்வி மாணவர்களுக்கும் பிளஸ் ௨ உடனடித் துணைத் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கும் கவுன்சிலிங் நடந்தது. அருந்ததியர்இடஒதுக்கீட்டில் மீதமிருந்த இடங்கள் தலித் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டு அதற்கான கவுன்சிலிங் நேற்று நடந்தது.
அனைத்து கட்ட கவுன்சிலிங்கும் நேற்று முடிவடைந்தன. பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு உள்ள 2 லட்சத்து 374 இடங்களில் 1 லட்சத்து 6,219 இடங்கள் நிரம்பின. விளையாட்டுப் பிரிவில் 420 மாற்றுத் திறனாளிகள் 163 பொதுக் கவுன்சிலிங் மூலம் ஒரு லட்சத்து 1,620 துணைத் தேர்வு எழுதியவர்களில் 1,611 மற்றும் அருந்ததியர் இடங்களில் தலித் மாணவர்களுக்கு 200 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தொழிற்கல்வி படித்த மாணவர்களில் 2,205 பேர் பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர்ந்துள்ளனர். பி.ஆர்க்., படிப்புக்கு உள்ள 2,048 இடங்களுக்கு 2703 பேர் அழைக்கப்பட்டு 1,750 பேர் சேர்க்கை அனுமதி பெற்றுள்ளனர்.மொத்தமாக பி.இ., - பி.டெக்., மற்றும் பி.ஆர்க்., படிப்புகளுக்கு உள்ள 2 லட்சத்து 2,422 இடங்களில் 1 லட்சத்து 7,969 இடங்கள் நிரம்பியுள்ளன. பி.ஆர்க்.கில் 298 இடங்கள் உட்பட 94,453 இடங்கள் காலியாக உள்ளன.ஒதுக்கீடு பெற்றவர்களில் 67,394 பேர் மாணவர்கள்; 40,575 பேர் மாணவியர். இவர்களில் 59,073 பேர் முதல் தலைமுறைப் பட்டதாரிகள் ஆக பதிவு செய்துள்ளனர். இவர்களில் 16,580 பேர் மெக்கானிக்கல் ஆங்கில வழிப் பிரிவிலும் 149 பேர் மெக்கானிகல் தமிழ் வழியிலும் சேர்ந்துள்ளனர்.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 5,000 பேர் குறைவாகத்தான் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு இரண்டு இன்ஜி., கல்லூரிகளில் முறைகேடு பிரச்னையால் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைக்கவில்லை. மூன்று கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை நடத்தாமல்படிப்படியாக கல்லூரியை மூடுவதற்கு அனுமதி பெற்றுள்ளன.

ஒதுக்கீடு பெற்றவர்களில் 67,394 பேர் மாணவர்கள்; 40,575 பேர் மாணவியர். இவர்களில் 59,073 பேர்
முதல் தலைமுறைபட்டதாரிகள் ஆக பதிவு செய்துள்ளனர்

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png