திண்டுக்கல்லில் 40 பள்ளிகளில் சமைக்க ஆளில்லை
திண்டுக்கல் மாவட்டத்தில் சமையல் உதவியாளர் பணிநியமன அறிவிப்பில் சத்துணவு சமைக்க ஆளில்லாத 40 பள்ளிகள் இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சத்துணவு ஊழியர்கள் பற்றாக்குறையால் பல அரசு பள்ளிகளில் உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. முதற்கட்டமாக சமையல் உதவியாளர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 286 சமையல் உதவியாளர்கள் நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தொப்பம்பட்டி ஒன்றியத்தில் கந்தப்பகவுண்டன்வலசு, சண்முகவலசு, பழநி ஒன்றியத்தில் இந்திராநகர், பள்ளிகூடத் தான்வலசு, ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் நெட்டியப்பட்டி, மலையாண்டிபுரம் உள்ளிட்ட 40 பள்ளிகளில் சமையலர், உதவியாளர் ஆகிய 2 பணியிடங்களும் காலியாக உள்ளன. இதில் ஒருசில பள்ளிகளில் மட்டுமே பொறுப்பாளர்கள் உள்ளனர்.உணவு சமைக்க சமையலர், உதவியாளர் உள்ள பள்ளிகளில் இருந்து, யாராவது ஒருவர் சென்று அப்பள்ளிகளில் சமைக்கின்றனர். சமைக்க ஆளில்லாத 40 பள்ளிகளில் ஒன்று கூட தற்போதைய உதவியாளர் நியமன அறிவிப்பில் இடம்பெறவில்லை. இதற்கு சத்துணவு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.