மதுக்கடைகளை மூட
வலியுறுத்தி போராட்டம்: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை மெட்ரிக் பள்ளி கூட்டமைப்பு அறிவிப்பு
தமிழ்நாடு தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான கூட்டமைப்பின் மாநில
பொது செயலாளர் நந்தகுமார்
கூறியதாவது: மதுவுக்கு எதிராக போராடி மறைந்த காந்தியவாதி சசிபெருமாள் சுதந்திர இந்தியா என்ற பெயரில் பள்ளி நடத்தி வந்தார். தனியார்
பள்ளிகளுக்கான சங்கத்தில் உறுப்பினராகவும்
இருந்தார். அவரது
கொள்கை அடிப்படையில் தமிழகத்தில் பள்ளிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளுக்கு அருகிலேயே டாஸ்மாக் மதுக்கடைகள் இருப்பதால் மாணவர்களும் மதுவுக்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி இன்று (4ம் தேதி) ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை விட உள்ளனர். தனியார் பள்ளிகள் கூட்டமைப்பில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.