!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 17 ஆகஸ்ட், 2015

தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்கள் கலந்தாய்வு 506 பேர் இடங்களை தேர்ந்து எடுத்தனர்


தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி நடந்த அந்த கலந்தாய்வில் ஓவிய ஆசிரியர்கள் 32 பேர்களும், இசை ஆசிரியர்கள் 15 பேர்களும், தையல் ஆசிரியர்கள் 9 பேர்களும், உடற்கல்வி ஆசிரியர்கள் 45 பேர்களும், இடை நிலை ஆசிரியர்கள் 56 பேர்களும், உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் 100 பேர்களும் இடங்களை தேர்ந்து எடுத்தனர். மாவட்டத்திற்குள் நடந்த கலந்தாய்வில் 249 பேர்களும் இடங்களை தேர்ந்து எடுத்தனர். மொத்தம் 506 ஆசிரியர்கள் இடங்களை தேர்ந்து எடுத்தனர். 


உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுபவர்களுக்கான கலந்தாய்வு நாளை(செவ்வாய்க்கிழமை) அந்தந்த முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் நடக்கிறது. 

இதில் ஏற்கனவே முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்றுள்ள 1 முதல் 450 வரை எண் கொண்டவர்கள் கலந்துகொள்ளலாம். 

இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.  

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png