!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 17 ஆகஸ்ட், 2015

பெற்றோர் கண்டிப்பை ஏற்க மறுக்கும் சிறார்; வீட்டை விட்டு ஓடுவது அதிகரிப்பு
சமூக வலைதளங்கள், சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்கு சாதனங்களின் பயன்பாட்டால், வீட்டை விட்டு ஓடி வரும் சிறார்கள், சொற்ப சம்பளத்திற்காக வேலை தேட முயற்சிப்பது, 'ஆபரேஷன் முஸ்கான்' திட்டத்திற்காக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், அம்பலமாகியுள்ளது.மாறிவரும் கலாசாரத்தின் விளைவாக, உணவு, உடை, பொழுதுபோக்கு என அனைத்திலும் அதிவேக மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.


இதை உள்வாங்கி கொள்ளும் சிறார்கள், உளவியல் ரீதியாக, பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். எதை கேட்டாலும் உடனே நிகழ்ந்து விட வேண்டும் என்கிற மனநிலை குழந்தைகள் மத்தியில் அதிகரிக்க துவங்கியுள்ளது.இதை அனுமதிக்காமல், பெற்றோர் கண்டிக்கும் பட்சத்தில், அதை சிறார்கள் ஏற்பதில்லை. வீட்டை விட்டு ஓடி வருவதோடு, சொற்ப சம்பளத்திற்கு, வேலை தேடவும் முயற்சிக்கின்றனர். கடந்த மாதம் முழுவதும், நகரின் பல பகுதிகளில், 'ஆபரேஷன் முஸ்கான்' திட்டத்திற்காக நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில் இது போன்ற பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.

உக்கடம், மேட்டுப்பாளையம் புது பஸ் ஸ்டாண்ட், காந்திபுரம், சிங்காநல்லுார், ரயில்வே ஸ்டேஷன் என, மக்கள் அதிகம் பயன்படுத்தும், போக்குவரத்து வழித்தடங்கள் உள்ள
பகுதிகளிலே, சிறார்களை போலீசார் மீட்டுள்ளனர். கடந்த ஜூலை மாதத்தில் மட்டும்,
16 குழந்தைகள் வீட்டை விட்டு ஓடி வந்துள்ளனர். இந்த, தேடுதல் வேட்டையை, ஆண்டின் எல்லா மாதங்களிலும்
நிகழ்த்தினால், நுாற்றுக்கணக்கான சிறார்கள் சிக்க வாய்ப்புள்ளது.
தவிர, சைல்டு லைன் எண்ணை, மன ரீதியான ஆலோசனை வேண்டி, பள்ளி மாணவர்கள் தொடர்பு கொள்வதும் அதிகரித்துள்ளது. கடந்த 2013ல், 22 பேரும், 2014ல், 46 சிறார்களும் தொடர்பு கொண்டதாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

'ஆபரேஷன் முஸ்கான்' திட்ட குழு அதிகாரிகள் கூறுகையில், 'கோவை போன்ற பெருவளர்ச்சி பெற்று வரும் நகரங்களில், வேலை கிடைப்பது எளிது. இதை அறிந்து கொண்டு, சொற்ப
அளவிலான கண்டிப்பை கூட ஏற்க முடியாமல், சிறார்கள் வீட்டை விட்டு ஓடி வருவது அதிகரித்துள்ளது. சிறார்கள் குறிப்பிட்ட வயதை அடையும் பட்சத்தில், பெற்றோர் வழிகாட்டுதல்
அவசியம். குழந்தைகளிடம் மனம் விட்டு பேச வேண்டும். குழந்தைகளின்
நண்பர்கள் வட்டாரம், பிடித்த பொழுதுபோக்கு, வெளி இட அனுபவங்கள் குறித்து அறிந்து, முறையாக வழிநடத்தினால், இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்கலாம்' என்றனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png