!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

நான்குவழிச் சாலைகளில் 74 ஆயிரம் மரங்கள்: உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
 சிவகாசி வழக்கறிஞர் ஆனந்தமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ.,) 75 ஆயிரம் கோடி ரூபாயில் 11 ஆயிரத்து 404 கி.மீ.,தூரத்திற்கு நான்குவழிச்சாலை அமைத்தது. கன்னியாகுமரி- வாரணாசிவரை 2369 கி.மீ., சாலை அமைக்க, விரிவாக்கத்திற்காக 1 லட்சத்து 78 ஆயிரம் மரங்களை வெட்டினர்.
இதற்கு ஈடாக, மத்திய அரசின் உறுதிமொழிப்படி 5 லட்சத்து 34 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்திருக்க வேண்டும்.தேசிய நெடுஞ்சாலைகளில் வெயிலுக்கு ஒதுங்கக்கூட மரங்கள் இல்லை. 'தேசிய நெடுஞ்சாலைகளின் இருபுறமும் மரங்கள் நட மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே மனு செய்தேன்.2014 ஜூன் 6 ல் நீதிபதிகள்,'ஒருமரம் வெட்டினால், ஈடாக 10 கன்றுகள் நட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில், நான்குவழிச் சாலைகளில் 6 மாதங்களுக்குள், நடவு செய்ய வேண்டும்,' என உத்தரவிட்டனர். இதை நிறைவேற்றாததால் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் விஜய் சிப்பரை நீதிமன்ற அவமதிப்பின் கீழ் தண்டிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி கொண்ட அமர்வு விசாரித்தது. மனுதாரர் ஆஜரானார். என்.எச்.ஏ.ஐ., சார்பில் வழக்கறிஞர் அருள்வடிவேல் அறிக்கை தாக்கல் செய்தார். அதில்,' உளுந்தூர்பேட்டை--பாடலூர், பாடலூர்- -திருச்சி, திருச்சி-- திண்டுக்கல், திருச்சி-- துவரங்குறிச்சி--மதுரை இடையே 77 ஆயிரத்து 56 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டது. 74 ஆயிரத்து 286 மரக்கன்றுகளை நட்டுள்ளோம். மீதியை செப்.,30 க்குள் நட்டு முடிப்போம்,' என குறிப்பிடப்பட்டுஉள்ளது. நீதிபதிகள் ஆக.,20க்கு ஒத்தி
வைத்தனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png