!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

அண்ணா பல்கலை உதவி பேராசிரியர்கள்நியமன அறிவிப்பை ரத்து செய்ய வழக்கு: பதில் கோரும் உயர்நீதிமன்றம்
அண்ணா பல்கலை உதவி பேராசிரியர்கள் பணி நியமன அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கில் அரசுத்தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

கடலாடி புரசங்குளம் கோவிந்தராஜ் தாக்கல் செய்த மனு:ஏ.எம்.ஐ.இ.,மற்றும் எம்.இ.,படித்துள்ளேன். அண்ணா பல்கலையின் 16 கல்லுாரிகளில் உதவி பேராசிரியர், நுாலகர், உடற்கல்வி இயக்குனர்கள் பணியிடங்களுக்கு பதிவாளர் ஜூலை 11 ல் அறிவிப்பு வெளியிட்டார். அதில் சிவில் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு பி.இ.,அல்லது பி.டெக்.,சிவில் இன்ஜினியரிங் முடித்து அத்துடன் எம்.இ.,அல்லது எம்.டெக்., சிவில் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும் என கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பி.இ.,மற்றும் எம்.இ.,சிவில் இன்ஜினியரிங் படிப்புகளில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. ஆனால் அதை கருத்தில் கொள்ளாமல், சிவில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு மட்டும் வாய்ப்பளிக்கும் வகையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் சிவில் இன்ஜினியரிங் என பொதுவாக உள்ளது. சிவில் இன்ஜினியரிங் பொறியியல் படிப்புகளில் உள்ள பல்வேறு பிரிவுகள் சிவில் இன்ஜினியரிங்கிற்கு சமமானது.
ஏ.எம்.ஐ.இ.,படிப்பு பி.இ.,க்கு நிகரானது என பல்கலை மானியக்குழு அறிவித்துள்ளது. ஏ.எம்.ஐ.இ.,முடித்தவர்கள் பல்கலை பணி நியமனத்திற்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனால் என்னைப்போல் பலர் பாதிக்கப்படுவர். அறிவிப்பில் இட ஒதுக்கீடு பின்பற்றவில்லை. பல்கலை பதிவாளரின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இட ஒதுக்கீடை பின்பற்றி, கல்வித் தகுதியை முறையாக குறிப்பிட்டு புதிய அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி டி.ராஜா விசாரித்தார்.கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், அண்ணா பல்கலை வழக்கறிஞர் ராஜராஜன், மனுதாரர் வழக்கறிஞர் அருள்வடிவேல் ஆஜராகினர்.
உயர்கல்வித்துறை செயலாளர், சென்னை அண்ணா பல்கலை பதிவாளர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png