!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

சிவகங்கையில் ஆசிரியர்கள் கலந்தாய்வில் 'தள்ளுமுள்ளு'
சிவகங்கையில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் காலியிடங்களை மறைத்ததால் கல்வித்துறையினருக்கும், ஆசிரியர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் கலந்தாய்வு நடந்தது.சிவகங்கை மருதுபாண்டியர் மேல்நிலைப்பள்ளியில் சிவகங்கை மாவட்ட தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு டி.இ.இ.ஓ., அப்துல்ரகீம் தலைமையில் நேற்று நடந்தது.

12 ஒன்றியங்களில் சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஒன்றியங்களுக்கு நடந்தது. காலியிடம் இன்றி, எஞ்சிய ஒன்றியங்களுக்கு நடக்கவில்லை.
ஒன்றியம் வாரியாக மாறுதல் கோரிய தலைமை ஆசிரியர்கள் அழைக்கப்பட்டனர். புதுபட்டி, நவதாவூர், பெரியநரிக்கோட்டை, சிலுக்கப்பட்டி உட்பட சில காலியிடங்கள் மறைக்கப்பட்டன.
இது குறித்து ஆசிரியர்கள் கேள்வி எழுப்பினர். “ நாங்கள் எதுவும் மறைக்கவில்லை. மேலிட உத்தரவுப்படியே நடக்கிறது” என, கல்வித்துறையினர் கூறினர்.
ஆத்திரம் அடைந்த ஆசிரியர்கள் கல்வித்துறை அலுவலர்களுடன் வாக்குவாதம் செய்தனர். 'தள்ளுமுள்ளு'ஏற்பட்டது. காலியிடங்களை முறையாக அறிவிக்க கோஷம் எழுப்பினர்.
சி.இ.ஓ., செந்திவேல் முருகன், தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) அப்துல் ரகீம் சமாதானம் செய்தனர். ஆனாலும், சில ஆசிரியர்கள் தொடர்ந்து வாக்கு வாதம் செய்தனர்.வேறு வழியின்றி போலீசாரை வரவழைத்தனர். இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, எஸ்.ஐ., இளஞ்செழியன் உள்ளிட்ட போலீசார் சமரசம் செய்தனர். இதன்பின் போலீஸ் பாதுகாப்புடன் ஒன்றியம் வாரியான கலந்தாய்வு தொடந்து நடந்தது.
பிரச்னையால் ஒரு மணி நேரம் கலந்தாய்வு நிறுத்தப்பட்டது.
ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர் ஜோசப் ரோஸ் கூறுகையில், “வெளிப்படையான கலந்தாய்வு நடக்கவில்லை. இயக்குனரகத்தில் சில இடங்களை மறைக்க சொன்னதால் மறைக்கிறோம் என்கின்றனர். உண்மையான காலியிடத்திற்கு பதில்வேறு இடத்தை அறிவிக்கின்றனர். தமிழகம் முழுவதும் இதே நிலை. முதல்வர் ஜெ., விற்கு தெரிந்தே நடக்கிறதா. இயக்குனரகத்தின் வாய் மொழியால் சில கீழ்நிலை ஊழியர்கள் புரோக்கராக செயல்படுகின்றனர். இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வோம்,” என்றார்

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png