!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

ஆள்மாறாட்டம்: சிக்குகிறார் சத்தீஸ்கர் மாநில கல்வி அமைச்சர்
மனைவிக்கு பதில், வேறொரு பெண்ணை, ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வைத்த பிரச்னையில், சத்தீஸ்கர் மாநில கல்வி அமைச்சர் சிக்குகிறார்.


சத்தீஸ்கர் மாநிலத்தில், பா.ஜ., கட்சியை சேர்ந்த, ராமன் சிங் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் கல்வி அமைச்சர் கேதார் கஷ்யப்; இவரது மனைவி சாந்தி கஷ்யப். இவர், பிலாஸ்பூரில் உள்ள, பண்டிட் சுந்தர்லால் சர்மா திறந்த ெவளி பல்கலையில், எம்.ஏ., இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த செவ்வாய் கிழமை, ஆங்கில தேர்வு நடந்தது. ஒரு பெண் பதற்றத்துடன் தேர்வு எழுதிக் கொண்டிருந்ததால், சந்தேகமடைந்த மேற்பார்வையாளர், அவருடைய பெயரை கேட்ட போது, கிரண் மவுர்யா என கூறினார். நுழைவுச்சீட்டை பரிசோதித்தபோது, அதில் கல்வி அமைச்சர் கேதார் கஷ்யப்பின் மனைவி, சாந்தியின் பெயர் இருந்தது.

இதற்கிடையில், அந்தப் பெண் தேர்வு அறையை விட்டு தப்பியோடினார். சம்பவம் குறித்து, கல்வி துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடந்த தேர்வு மையத்துக்கு வந்த அதிகாரிகள், அந்தப் பெண், இதற்கு முந்தைய மூன்று தேர்வுகளை எழுதியதையும் கண்டுபிடித்தனர்.

இதுகுறித்த தகவல், மாநில முதல்வர் மற்றும் கல்வி அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவம் குறித்த விசாரணைக்குப் பின், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png