புலிகளை காக்க பள்ளி மாணவர்கள் புலிவேடம் அணிந்து ஊர்வலம்
புலிகள் அழிவதை தடுக்க வேண்டும், வனங்களை காக்க வேண்டும் என்பதை வலியுறுத்திபள்ளி மாணவ மாணவிகள் புலிவேடம் அணிந்து ஊர்வலமாக சென்றனர்.
நுாறு ஆண்டுகளுக்கு முன் இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 97 சதவீதம் அழிந்து விட்டதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு லட்சம் புலிகளில் தற்போது மூவாயிரம் புலிகள் மட்டுமே உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு 3200 புலிகள் இருந்தது. இந்த ஆண்டு அது மூவாயிரம் ஆக சுருங்கி விட்டது. புலி இனத்தை சேர்ந்த பல்வேறு வகை இன விலங்குகள் முற்றிலுமாக அழிந்து விட்ட நிலையில் புலி இனத்தை காக்க அரசும், சமூக ஆர்வலர்களும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.காடுகள் சுருங்குவதால் விலங்குகளும் குறைகின்றன. எனவே காடுகள் அழியாமல் தடுக்க வேண்டும், புலிகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், திட்டுவிளையில் பள்ளி மாணவ மாணவிகளின் ஊர்வலம் நடந்தது. புலி வேடம் அணிந்து மாணவ- மாணவிகள் ஊர்வலமாக வந்தனர். லயன்கிளப் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஊர்வலத்தில் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.