!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 6 அக்டோபர், 2015

டில்லியில் தேசிய கலை விழா பள்ளிகளில் பயிற்சி துவக்கம்
மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், ஆண்டுதோறும் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் தேசிய கலை விழா, 'கலா உத்சவ்' என்ற பெயரில் நடத்தப்படுகிறது. 

இந்த ஆண்டு, டிச., 8 முதல், 10 வரை, டில்லியில், தேசிய போட்டி நடக்கிறது. பரிசளிப்பு மற்றும் கலை விழா, 11ம் தேதி நடக்கிறது. தேசிய அளவில் வெற்றி பெறும் குழுவுக்கு, முதல் பரிசாக, 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். மாநிலங்கள், தங்களின் பாரம்பரிய கலைகளை பட்டியலிட்டு, இசை, நாடகம், ஓவியம், நடனம் போன்ற போட்டிகள் நடத்தி, தேசிய போட்டிக்கு, மூன்று குழுவை தேர்வு செய்ய வேண்டும். தமிழகத்தில் மாணவ, மாணவியரை தயார் செய்ய, அரசு பள்ளிகளுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உத்தரவிட்டது.
இதன்படி, ஒயிலாட்டம், கோலாட்டம், கரகாட்டம், காவடி ஆட்டம், வில்லுப்பாட்டு, தெருக்கூத்து, பொம்மலாட்டம், சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட, தமிழக பாரம்பரிய கலைகளை ஆசிரியர்கள் தேர்வு செய்து, நேற்று முதல் பயிற்சியை துவங்கியுள்ளனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png