!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 7 அக்டோபர், 2015

பள்ளி மாணவனுக்கு இழப்பீடு தராததால் அரசு பஸ்கள் ஜப்தி
விபத்தில் காயமடைந்த மாணவனுக்கு, இழப்பீடு தராததால் அரசுக்கு சொந்தமான இரு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன.அன்னுார் அருகே மொண்டிபாளையம், புகழூரை சேர்ந்த ஜெகநாதன் மகன் ரஞ்சித் குமார், 15; அங்குள்ள பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்த அவர், 2010, மார்ச், 3ல், அன்னுார், சத்தி ரோட்டில், ரோட்டை கடந்து செல்ல முயன்றபோது, அந்த வழியாக வேகமாக வந்த, அரசு பஸ் மோதி படுகாயமடைந்தார்; தீவிர சிகிச்சையில் உயிர் பிழைத்தார். விபத்து காரணமாக ரஞ்சித்குமார் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இழப்பீடு கோரி, கோவை எம்.சி.ஓ.பி., கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. விசாரித்த நீதிமன்றம், 12.87 லட்சம் ரூபாய் இழப்பீடு தர, 2014, ஜூலையில் உத்தரவிட்டது. இழப்பீடு வழங்காததால், நிறைவேற்று மனு, அதே கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இழப்பீட்டு தொகை வட்டியுடன் சேர்த்து 18 லட்சமாக அதிகரித்தது.இதனால், கோவையில் இருந்து சேலம், நாமக்கல், சத்தி, திருச்சி, அந்தியூர் செல்லும், நான்கு பஸ்களை ஜப்தி செய்வதற்கு உத்தரவிட்டது. அதன்படி, நாமக்கல், சேலம் செல்ல தயாராக இருந்த இரு பஸ்கள் நேற்று ஜப்தி செய்யப்பட்டு, கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png