!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

சனி, 28 நவம்பர், 2015

பணிநிரவலால் பதறும் 2 ஆயிரம் ஆசிரியர்கள்: 'கவுன்சிலிங்' நடத்தப்படுமா


மாநிலம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்- மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, உபரி ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேர், கலந்தாய்வு இல்லாமல் விரைவில் பணிமாற்றம் செய்யப்பட உள்ளதால் கலக்கமடைந்துள்ளனர்.அரசு பள்ளிகளில் உள்ளதுபோல், உதவி பெறும் பள்ளிகளிலும் உபரி ஆசிரியர்களை கணக்கெடுத்து, ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள உதவிபெறும் பள்ளிகளில், பணிநிரவல் செய்யப்படுகின்றனர்.பணிநிரவலில் மாவட்ட கல்வி அலுவலர்கள் முடிவு செய்யும் பள்ளியே, இறுதி செய்யப்படுகின்றன. இதில் பாரபட்சம் இருப்பதால் சிலருக்கு அருகில் உள்ள பள்ளிகளிலும், சிலருக்கு தொலைவிலுள்ள பள்ளிகளிலும் பணிமாற்றம் கிடைக்கிறது என சர்ச்சை எழுந்தது.இதனால், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்துவதுபோல் கலந்தாய்வு மூலம் பள்ளிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கடந்தாண்டு கோரிக்கை எழுந்தது. ஆனால், நடவடிக்கை இல்லை. இந்தாண்டும் கல்வி அலுவலர்களே பள்ளிகளை முடிவு செய்ய உள்ளனர். இதனால் பட்டியலில் உள்ள 2 ஆயிரம் ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில அமைப்பாளர் நாகசுப்பிரமணி, மாவட்ட செயலாளர் முருகன் கூறுகையில், "உதவிபெறும் பள்ளிகளில், பொதுவாக ஆசிரியர்கள் மறைமுகமாக லட்சக்கணக்கான ரூபாய் பணம் கொடுத்து தான் பணியில் சேருகின்றனர். இவர்களை, 'உபரி' என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பள்ளிக்கு மாற்றம் செய்கின்றனர். அரசு ஆசிரியர்களுக்கு உள்ளதுபோல், இந்த ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு நடத்தி, பணிமூப்பு அடிப்படையில் பள்ளிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்," என்றனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png