!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 25 நவம்பர், 2015

அரசு அலுவலகங்களில் சி.சி. டி.வி. கேமரா: 2 மாதங்களுக்குள் முடிவெடுக்க அரசுக்கு உத்தரவு


இடைத்தரகர்களால் நடைபெறும் ஊழலைத் தடுப்பதற்கு அனைத்து அரசு அலுவலகங்களிலும் சி.சி. டி.வி. கேமரா பொருத்தக் கோரிய மனுவை 2 மாதங்களுக்குள் தமிழக அரசு முடித்து வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

 இதுதொடர்பாக கோவை நுகர்வோர் குரல் அமைப்பைச் சேர்ந்த என்.லோகு தாக்கல் செய்த மனு விவரம்:
 அரசு அலுவலகங்களுக்குள் அங்கீகாரமில்லாதவர்கள் ஆவணங்களைக் கையாளவும் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், ஆவணங்கள் பாதுகாப்பில்லாமல், காணாமல் போகவும் வாய்ப்புள்ளது. இதனால் பாதிப்புக்குள்ளாவது பொதுமக்கள்தான்.

 இதுபோன்றவர்கள் நுழைய கடுமையான கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை என்பதால், இடைத்தரகர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். எனவே, அரசு அலுவலகங்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

 எனவே, ஊழலைத் தடுக்கவும், இடைத்தரகர்களை அடையாளம் காணவும், அவர்கள் எந்த அதிகாரியை சந்திக்கிறார்கள் என்பதைக் கண்டறியவும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் சி.சி. டி.வி. கேமராக்களை பொருத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
 இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவு:

 இது தமிழக அரசின் கொள்கை முடிவுக்கு உள்பட்டது. மனுதாரின் கோரிக்கை மனுக்களை சட்டவிதிகளின்படி இரண்டு மாதங்களுக்குள் அரசு முடித்து வைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png