10 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்
மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட 10 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு புது முதல்வர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 8 பேர் பதவி உயர்வு பெற்றவர்கள். இதற்கான அரசாணை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த விவரம் (அவர்கள் ஏற்கெனவே வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்):
முதல்வராக பதவி உயர்வு பெற்றவர்கள்:
சிவ.சிதம்பரம் - பெரம்பலூர் மருத்துவக் கல்லூரி (சென்னை மருத்துவக் கல்லூரி பொது மருத்துவத் துறை பேராசிரியர்)
கணேசன்- திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி (சென்னை மருத்துவக் கல்லூரி இருதய அறுவைச் சிகிச்சைத் துறை பேராசிரியர்)
பிச்சை பாலசுந்தரம்- தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி (சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி நரம்பியல் துறை பேராசிரியர்)
வசந்தாமணி - விழுப்புரம் மருத்துவக் கல்லூரி (சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மகப்பேறு சிகிச்சைத் துறை பேராசிரியர்)
கனகராஜ்- சேலம் மருத்துவக் கல்லூரி (திருச்சி மருத்துவக் கல்லூரி பொது மருத்துவத் துறை பேராசிரியர் )
பரிமளா தேவி- புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி (திருச்சி மருத்துவக் கல்லூரி மகப்பேறு சிகிச்சைத் துறை பேராசிரியர்)
திருநாவுக்கரசு- தேனி மருத்துவக் கல்லூரி (மதுரை மருத்துவக் கல்லூரி மயக்கவியல் துறை பேராசிரியர்)
வைரமுத்து ராஜா- மதுரை மருத்துவக் கல்லூரி (நெல்லை மருத்துவக் கல்லூரி பொது மருத்துவத் துறை பேராசிரியர்)
பணியிட மாற்றம்:
ரேவதி- கரூர் மருத்துவக் கல்லூரி (மதுரை மருத்துவக் கல்லூரி)
குணசேகரன்- செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி (திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி).
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.