!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 26 நவம்பர், 2015

பள்ளியை ஜப்திக்கு முயற்சித்ததால் கொந்தளிப்பு

வாடகை பாக்கி செலுத்தாத விவகாரத்தில், மாநகராட்சி பள்ளியை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் முயற்சித்தனர். இதற்கு, பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அவர்கள் திரும்பிச் சென்றனர். வேலுார் தோட்டப்பாளையம் பகுதியில், தாரகேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 52 சென்ட் நிலத்தில், 75 ஆண்டுகளாக மாநகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏழை, எளிய நடுத்தர மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

கடந்த, 1990ம் ஆண்டு முதல் இந்த பள்ளிக்காக, இந்து சமய அறநிலையத்துறைக்கு வாடகை செலுத்தாமல், மாநகராட்சி நிர்வாகம் பாக்கி வைத்திருந்ததாக தெரிகிறது. இப்போது, இந்த பாக்கி, 13 லட்சம் ரூபாயாக உயர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.இது தொடர்பாக, 1999ம் ஆண்டு தாரகேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில், வேலுார் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாநகராட்சி பள்ளியிலுள்ள பொருட்களை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டது.
இந்நிலையில், பள்ளியை ஜப்தி செய்வதற்காக, இந்து அறநிலையத்துறை நிர்வாக அதிகாரியும், கோவில் செயல் அலுவலருமான ராதாமணி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், சம்பவ இடத்துக்கு நேற்று சென்றனர். 
இதுகுறித்த தகவல் அறிந்ததும், அப்பகுதி, த.மா.கா., கவுன்சிலர் பொற்செல்வி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர், தாரகேஸ்வரர் கோவில் முன் திரண்டனர். அவர்கள், 'வாடகை செலுத்தவில்லை என்பதால், ஏழைக் குழந்தைகள் படிக்கும் பள்ளியை ஜப்தி செய்யக் கூடாது' என்று வலியுறுத்தினர்.
மேலும், 'இந்து சமய அறநிலையத்துறைக்கு, வாடகை பாக்கி செலுத்தாமல், ஏராள மானோர் இருக்கையில், பள்ளியை ஜப்தி செய்வதற்கு முனைப்பு காட்டுவது ஏன்?' என்று, அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி ராதாமணியிடம் கேள்வி எழுப்பினர்.மாநகராட்சி இரண்டாவது மண்டல உதவி ஆணையர் வெங்கடேசன், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் வேலுார் வடக்கு போலீசார், பேச்சில் ஈடுபட்டனர். இதில், வாடகை பாக்கி தொகையை, இன்னும், 15 நாட்களுக்குள் செலுத்தி விடுவதாக, மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதையடுத்து, மாநகராட்சி தொடக்கப்பள்ளியை ஜப்தி செய்யும் நடவடிக்கையை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், தற்காலிகமாக ஒத்தி வைத்துச் சென்றனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png