!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 26 நவம்பர், 2015

27, 28, 29 ஆகிய மூன்று நாட்கள் மீண்டும் கன மழை எச்சரிக்கை -வானிலை ஆய்வு மையம்


தென்மேற்கு வங்க கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து விட்டது. தற்போது தெற்கு அந்தமான் கடலில் புதிதாக கடந்த 2 நாட்களாக மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

இதன் காரணமாக தமிழ் நாட்டில் ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்துள்ளது. தெற்கு அந்தமான் கடலில் உள்ள இந்த மேல் அடுக்கு சுழற்சி அடுத்த 48 மணிநேரத்தில் (27–ந்தேதி) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும்.

அதன் காரணமாக வருகிற 27, 28, 29 ஆகிய மூன்று நாட்கள் கடலோர மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும்.
தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திர கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்யும்

இவ்வாறு அவர் கூறினார்.

இன்று காலை 8.30 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் பெய்த மழை அளவு வருமாறு:–

பாபநாசம்–10 செ.மீ., மணிமுத்தாறு, அம்பாசமுத்திரம்–3 செ.மீ., திருச்செந்தூர், அறந் தாங்கி–2 செ.மீ., ராமேசுவரம், சேரன்மாதேவி, குன்னூர்– 1 செ.மீ.  ஆகும்.

வடகிழக்கு பருவ மழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரை தமிழகத்தில் சராசரியாக 440 மி.மீ. மழை பெய்வதுண்டு.
இந்த ஆண்டு அக்டோபர் 28-ந்தேதி தான் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. அப்போது முதல் நேற்று வரை 480 மி.மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது.
இது வழக்கமான சரா சரியை விட 40 மி.மீ. அதிக அளவு மழையாகும்.

சென்னை மாவட்டத்தில், வடகிழக்கு பருவ மழை கால மான 3 மாதத்தில் சரா சரியாக 790 மி.மீ. மழை பெய்யும். ஆனால் அக்டோ பர் 1 முதல் நவம்பர் 24-ந் தேதி வரையிலான 55 நாட் களில் இயல்பாக 580 மி.மீ. அளவுக்கு மழை பெய்ய வேண் டும். ஆனால் இப்போது 1140 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.
இது சராசரியை விட கூடு தலாக 350 மி.மீட்டர் மழை யாகும். 55 நாட்கள் பெய்ய வேண்டிய மழை அளவுடன் ஒப்பிட்டால் இரு மடங்கு ஆகும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 3 மாதங்களில் சராசரியாக 590 மி.மீ. மழை பெய்யும். இயல்பாக 430 மி.மீட்டர் அளவுக்கு மழை பெய்ய வேண்டும். ஆனால் நேற்று வரை திருவள்ளூரில் 1060 மி.மீ. அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. இது சராசரியை விட  கூடுதலாக 470 மி.மீ. மழை பெய்துள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 3 மாதங்களில் சராசரியாக 640 மி.மீ. மழை பெய்யும். 55 நாட்களில் இயல்பாக 470 மி.மீ. அளவுக்கு மழை பெய்ய வேண்டும். ஆனால் நவம்பர் 24 வரை 1190 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இது சராசரியை விட கூடுதலாக 550 மி.மீட்டர் மழையாகும். நாள் அடிப்படையில் கணக்கெடுத்தால் பருவ மழை காலம் நிறைவு பெற இன்னும் 37 நாட்கள் உள்ளது. இதிலும் மழை பெய்யும் போது மழை அளவு அதிகரிக்கும்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png