!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 26 நவம்பர், 2015

அரசு பள்ளியில் மது குடித்த மாணவிகள் கண்காணிக்க தவறிய எச்.எம் கணித ஆசிரியைக்கு மெமோ


அரசு பள்ளியில் மாணவிகள் மது குடித்ததை கண்காணிக்க தவறிய தலைமை ஆசிரியை, கணித ஆசிரியையிடம் விளக்கம் கேட்டு சி.இ.ஓ நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், கடந்த 21ம்தேதி தேர்வு எழுத வந்த 7 மாணவிகள் பள்ளி வகுப்பறையில் மதுகுடித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 7 பேரும் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 4 மாணவிகளின் பெற்றோர்கள் டிசியை வாங்கி சென்றுவிட்டனர். 3 மாணவியின் பெற்றோர்கள் டிசி வாங்க மறுத்து வருகின்றனர். மாணவிகளுக்கு மது எப்படி கிடைத்தது. இதை ஆசிரிய, ஆசிரியைகள் கண்காணிக்க முடியாமல் போனது ஏன்? போன்ற கேள்விக்கு விடை தெரியவில்லை. இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி, கணித ஆசிரியை ஆகிய இருவரிடமும் விளக்கம் கேட்டு முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் மெமோ அனுப்பியுள்ளார். 

பள்ளி ஆசிரியைகளிடம் கலெக்டர் தட்சிணாமூர்த்தி நடத்திய விசாரணையில்,  21ம் தேதி பள்ளியில் 10வது, மற்றும் பிளஸ்1, பிளஸ்2 ஆகிய 3 வகுப்பு மாணவிகளுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் பிளஸ் 1 மாணவிகளுக்கு வணிக கணிதம் தேர்வு நடத்தப்படவில்லை. மதுகுடித்த 7 மாணவிகளில் 4 பேர் வணிக கணிதம் தேர்வை எழுத வந்துள்ளனர். வணிக கணித பாட ஆசிரியை அன்றைய தினம் பள்ளிக்கு வரவில்லை என்றும் அதனால் அவர்களுக்கு தேர்வு நடத்தவில்லை எனவும் கூறப்படுகிறது. மாணவிகள் தேர்வு துவங்கும் முன்பே மதுகுடித்து விட்டதால், இந்த பிரச்னையில் ஆசிரியை மீது மட்டும் குறைசொல்வது சரியல்ல என பிற ஆசிரியர்கள் கூறுகின்றனர். இந்த பிரச்னை குறித்து முழுமையாக விசாரித்து, அறிக்கை அளிக்கும்படி கலெக்டர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png