!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 21 டிசம்பர், 2015

வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
காவல் துறை போல வனத்துறையிலும், ஊழியர்களின் வாரிசுகளுக்கு, 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிசீலிக்கும் படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக வனத்துறையில் வனக்காவலர், கள உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வாணையம், 2014 டிசம்பர், 22ல் அறிவிப்பு வெளியிட்டது.


அதில், விளையாட்டு வீரர்களுக்கு, 10 சதவீதம்; பெண்களுக்கு, 30; முன்னாள் ராணுவத்தினருக்கு, 5; ஆதரவற்ற விதவைகளுக்கு, 10; மாற்றுத் திறனாளிகளுக்கு, 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இத்தேர்வுக்கு விண்ணப்பித்த, கோவையைச் சேர்ந்த தீனதயாளமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'என் தந்தை, வனத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். போலீஸ் துறையில் பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற போலீசாரின் வாரிசுகளுக்கு, 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதைப் போல வனத்துறை ஊழியர்களின் வாரிசுகளுக்கும், 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும்' என, கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து, ஆறு வாரங்களுக்குள் தகுந்த உத்தரவை பிறப்பிக்கும் படி, தமிழக வனத்துறை செயலருக்கும், தேர்வாணையத்துக்கும் உத்தரவிட்டார்

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png