!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 8 டிசம்பர், 2015

சிவில் சர்வீஸ் தேர்வு தள்ளிப்போகுமா?

தமிழகத்தில், மழை வெள்ளத்தால், பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதால், வரும், 18ல் நடைபெறவுள்ள, சிவில் சர்வீஸ் பிரதான தேர்வை, இரு வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்' என, பார்லிமென்டில், தி.மு.க., சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 
தவிப்பு
ராஜ்யசபாவில், தி.மு.க., - எம்.பி.,யான சிவா நேற்று பேசியதாவது: வெள்ள பாதிப்புகளிலிருந்து, தமிழகம் இன்னும் மீளவில்லை. உணவு, மின்சாரம், தொலை தொடர்பு என, அடிப்படை வசதிகள் எதுவுமின்றி, மக்கள் தவிக்கின்றனர். அடுக்குமாடி குடியிருப்புகள் பல, மூன்று தளங்கள் வரை மூழ்கிக் கிடக்கிறது. மக்களின் உடைமை கள், முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் புத்தகங்கள், சான்றிதழ்கள் எல்லாமே நாசமாகி விட்டன. குறிப்பாக, சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு, பல மாதங்களாக, தங்களை தயார் செய்து வந்த மாணவர்கள் பலரின் புத்தகங்கள், எழுதுபொருட்கள் போன்றவற்றை வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது.சிவில் சர்வீஸ் 
தேர்வுக்கு, மாணவர்கள் தங்களை தயார் செய்ய வேண்டுமெனில், பல மணி நேரம் படிக்க வேண்டும்; கடின உழைப்பு மேற்கொள்வது அவசியம். இவற்றுக்கு, தமிழகத்தின் தற்போதைய சூழ்நிலை ஏற்புடையது அல்ல. அனைத்து மாநில மாணவர்களோடும் போட்டியிட, மனம் மற்றும் உடல்ரீதியாக தமிழக மாணவர்கள், 
தங்களை தயார்படுத்த அவகாசம் தேவை. எனவே, 18ம் தேதி நடைபெறவுள்ள சிவில் சர்வீஸ் மெயின் தேர்வை, இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். 
பரிசீலனைஇதற்கு பதிலளித்த, பார்லிமென்ட் விவகார இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, ''இது குறித்து பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கையை மத்திய அரசு நிச்சயம் எடுக்கும்,'' என்றார்.


Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png